ADDED : பிப் 25, 2022 10:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாற்கடலைக் கடைந்த போது எழுந்த விஷத்தில் இருந்து மிகுந்த உஷ்ணம் கிளம்பியது. செய்வதறியாது தவித்த தேவர்கள் கருணைக்கடலான சிவபெருமானை நோக்கி ஓடினார்கள். அவர்கள் மீது இரக்கப்பட்ட சிவன் தன் அருகில் இருந்த நண்பர் சுந்தரரிடம் பாற்கடலில் எழுந்த விஷத்தை திரட்டி வருமாறு கட்டளையிட்டார். அவரும் சிவமந்திரம் ஜபித்து விஷத்தை நாவல் பழம் போல உருட்டி வந்தார். சிவன் அதை விழுங்கினார். இதனைக் கண்ட தேவர்கள் 'ஆலாலகண்டா' 'அற்புத சுந்தரா' என்று கோஷமிட்டனர். விஷத்தைத் திரட்டி அற்புதம் நிகழ்த்தியவர் என்பது இதன் பொருள்.

