ADDED : டிச 02, 2016 10:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாவையின் முதல் பாடல் அதன் நோக்கத்தைச் சொல்கிறது. இரண்டு முதல் ஐந்து பாடல்கள் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் சிறப்புகளைச் சொல்கிறது. ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோவிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது. இந்தப் பாடல்களில், அந்தக் காலத்தில் மார்கழி மாதத்தில் காலை நேரப் பணிகள் எப்படி இருந்தன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கடைசி 15 பாடல்கள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளைக் கெஞ்சும் ஆண்டாளின் மனநிலை புரிகிறது.

