ADDED : மார் 25, 2022 11:39 AM

சென்னை அம்பத்துாரில் உள்ள யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள். இவர் தீட்சை பெற்று 50 ஆண்டுகளாகி விட்டது.
9 வயது வரை பேச்சு வராததால் இவரது தந்தை புவனேஸ்வரி சுவாமிகள், அம்மன் மந்திரத்தை நாவில் எழுத பேசும் சக்தியை பெற்றார். பாலாம்பிகை மந்திரத்தை 9கோடி முறை உச்சரித்தபடி புனித நதிகளில் தவம் செய்தவர். இவர் கைப்பட எழுதிய மந்திரங்கள் அடங்கிய புத்தகம் மடத்தில் பாதுகாக்கப்படுகிறது. நான்கு புறம் நெருப்பு, மேலே சூரியன் இருக்கும் நிலையில் செய்யும் பஞ்சாக்னி தவத்தை அடிக்கடி மேற்கொள்வார்.
7000 பக்தி பாடல்களை மனப்பாடம் செய்துள்ளார்.
இதுவரை 1100 முறை கங்கை, காவிரி போன்ற புனித நதிகளில் பூஜை நடத்தியுள்ளார். நதிகளைப் போற்றுவதும், சுத்தம் செய்வதும் என நீரின் பெருமையை உலகிற்கு உணர்த்தி வருகிறார்.
மகாகணபதி, பாலா, வாராஹி, ராஜராஜேஸ்வரி, 'உனக்குள் உன்னைத்தேடு' உட்பட 130 நுால்களை எழுதியுள்ள இவரின் முதல் நுாலை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பெற்றுக் கொண்டார்.

