
* ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம். அவ்வாறு முடியாவிட்டால் உதவி செய்தவரை புகழ்ந்து கொண்டே இருங்கள்.
* நீங்கள் யாருடன் சேர்ந்து வாழுகின்றீர்களோ அவர்களுடனே நாளை மறுமையிலும் இருப்பீர்கள்.
* சிறுநீர் கழிக்கும்போது பேசாதீர். நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* பொய் பேசாமல் வியாபாரம் செய்யுங்கள்.
* உண்மை பேசுங்கள். வெற்றியைத் தரும்.
* செல்வந்தராக மாற வேண்டும் என்று பேராசைப்படாதீர்.
* உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்லுங்கள். அந்த பாலத்திலேயே கட்டடம் கட்டி தங்காதீர்கள்.
* உலகத்தின் மீது பிரியம் வைப்பது எல்லா பாவங்களுக்கும் வேராகும்.
* வெயிலில் சுடுநீரில் குளிக்காதீர்கள். அது வெண்குஷ்டத்தை உண்டாக்கிவிடும்.
* நீங்கள் செய்த பாவங்களே நோயாக வருகின்றன. எனவே பாவம் செய்யாதீர்கள்.
* நெருப்பை தண்ணீர் அணைத்துவிடும். அதுபோல நாம் செய்யும் தர்மம் பாவங்களை அழித்துவிடும்.
- பொன்மொழிகள்

