உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை'

ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை'

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் அவருக்கான சரியான வெற்றி இன்னும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் ஜெய்.

தற்போது பாபு விஜய் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படம் ‛சட்டென்று மாறுது வானிலை'. மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர யோகி பாபு, ஸ்ரீமன், கருடன் ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. லாக்கப் மரணம், போலீஸ் விசாரணை பற்றிய படமாக இது இருக்கும் என முதல் பார்வை போஸ்டர் மூலம் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !