உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛தி ராஜா சாப்' பட சம்பள பாக்கி விவகாரம் ; தயாரிப்பாளர் விளக்கம்

‛தி ராஜா சாப்' பட சம்பள பாக்கி விவகாரம் ; தயாரிப்பாளர் விளக்கம்


பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸாக இருக்கும் படம் ‛தி ராஜா சாப்'. இயக்குனர் மாருதி டைரக்ஷனில் உருவாகியுள்ள இந்த படத்தில் நித்தி அகர்வால், மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்துள்ள பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் சோசியல் மீடியாவில் பரவியது.

இதனை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்துள்ள தயாரிப்பு நிறுவனம், “ஜூலை ஷெட்யூலுக்கான பணப்பட்டுவாடா தாமதமாகி இருக்கிறது என்பதை நாங்களே ஒப்புக்கொள்கிறோம். இது சமீபத்தில் திடீரென ஏற்பட்ட ஸ்ட்ரைக் காரணமாக ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் ஏற்பட்ட தாமதம் தான். கடந்த 12 மாதங்களில் நாங்கள் தினசரி கூலி தொழிலாளர்களுக்காக 60 கோடி ரூபாய் வரை சம்பளமாக கொடுத்திருக்கிறோம். இன்னும் ஒரு கோடி மட்டுமே பாக்கி இருக்கிறது. தற்போது போராட்டத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு ஏற்படப் போகும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த வாரத்திலேயே அந்தத் தொகையையும் கொடுத்துவிட தீர்மானித்துள்ளோம். ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்களது கடின உழைப்புக்கான தொகை கவுரவத்துடன் சென்று சேர வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !