ஜொலிக்கும் காமன்வெல்த் பதக்கம்

லண்டன்: பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் வழக்கப்பட உள்ள பதக்கங்கள் வெளியாகின. இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22வது காமன்வெல்த் விளையாட்டு வரும் ஜூலை 28 முதல் ஆக. 8 வரை நடக்கவுள்ளது. 72 நாடுகளில் இருந்து 5,054 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 20 விளையாட்டுகள் இடம் பெறவுள்ளன. மொத்தம் 283 பிரிவுகளில் 1,875 பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

காமன்வெல்த் வரலாற்றில் முதன் முறையாக வீரர்களை விட (134), வீராங்கனைகள் (136) பங்கேற்கும் பிரிவுகள் அதிகம் உள்ளன. தவிர கலப்பு பிரிவில் 13 பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. நேற்று பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

தங்கம், வெள்ளி பதக்கம் தலா 150 கிராம், வெண்கலம் 130 கிராம் எடை கொண்டதாக உள்ளன. பர்மிங்காமில் உள்ள 'ஸ்கூல் ஆப் ஜுவல்லரி' சார்பில் பதக்க டிசைன் குறித்து போட்டி நடத்தப்பட்டது. கடைசியில் உள்ளூர் மாணவர்கள் 'டிசைன்' தேர்வு செய்யப்பட்டது. சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கால்வாய், சாலைகள் காமன்வெல்த் நடக்கவுள்ள பர்மிங்காம் நகரை அடைவது, பார்வையற்றவர்கள் பதக்கத்தை உணர முடியும் வகையில் பதக்கம் 'டிசைன்' செய்யப்பட்டுள்ளன.

Advertisement