லவ்லினாவுக்கு நிம்மதி * பயிற்சியாளருக்கு அனுமதி

பர்மிங்காம்: லவ்லினா பயிற்சியாளருக்கு காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா 24. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர். தனது இரு பயிற்சியாளர்கள் சந்தியா, அமே கோலேகருடன் காமன்வெல்த் விளையாட்டுக்காக இங்கிலாந்தின் பர்மிங்காம் சென்றார். காமன்வெல்த் கிராமத்தில் லவ்லினா பயிற்சியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அமே கோலேகர் நாடு திரும்ப, சந்தியா மட்டும் வேறு இடத்தில் தங்கினார். இதனால், மனவருத்தம் அடைந்த லவ்லினா, 'தனது பயிற்சி பாதிக்கப்படுவதாக' தெரிவித்தார். உடனடியாக செயலில் இறங்கிய இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஒ.ஏ.,) சந்தியாவுக்கு அனுமதி கொடுத்தது.

ஐ.ஒ.ஏ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,''லவ்லினா பயிற்சியாளர் சந்தியா, தற்போது இந்திய அணியுடன் இணைந்துள்ளார். காமன்வெல்த் கிராமத்தில் தங்குவதற்கு இவருக்கு அறை ஒதுக்கப்பட்டது,'' என்றார்.மீண்டும் 'கொரோனா'

காமன்வெல்த் விளையாட்டில் முதன் முறையாக பெண்கள் கிரிக்கெட் நடக்கவுள்ளது. ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி, ஜூலை 29ல் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியின் 2 வீராங்கனைகளுக்கு கொரோனா ஏற்பட, அவர்கள் இங்கிலாந்து செல்லவில்லை. மற்ற வீராங்கனைகள் மட்டும் கிளம்பிச் சென்றனர்.

Advertisement