சரத் கமல்–சத்யன் ஜோடி வெள்ளி: காமன்வெல்த் டேபிள் டென்னிசில்

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு டேபிள் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் சத்யன், சரத் கமல் ஜோடி வெற்றி வென்றது.இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 44வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், சத்யன் ஞானசேகரன் ஜோடி, இங்கிலாந்தின் பால் டிரிங்கால், லியாம் பிட்ச்போர்டு ஜோடியை சந்தித்தது. இதில் சரத் கமல்-சத்யன் ஜோடி 2-3 (11-8, 8-11, 3-11, 11-7, 11-4) என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.* ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், இங்கிலாந்தின் பால் டிரிங்கால் மோதினர். அபாரமாக ஆடிய சரத் கமல் 4-2 (11-8, 11-8, 8-11, 11-7, 9-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் 1-4 (5-11, 11-4, 8-11, 9-11, 9-11) என இங்கிலாந்தின் லியாம் பிட்ச்போர்டிடம் தோல்வியடைந்தார்.

பவினா 'தங்கம்' பெண்களுக்கான பாரா டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ('கிளாஸ் 3-5') பைனலில் இந்தியாவின் பவினா படேல், நைஜீரியாவின் கிறிஸ்டியானா இக்பியோயி மோதினர். பவினா 3-0 (12-10, 11-2, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.இப்பிரிவின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சோனல்பென் படேல், இங்கிலாந்தின் சுய் பெய்லி மோதினர். இதில் சோனல்பென் 3-0 (11-5, 11-2, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் கைப்பற்றினார்.

ஸ்ரீஜா ஏமாற்றம்

பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, ஆஸ்திரேலியாவின் யாங்ஜி லியு மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்ரீஜா 3-4 (11-3, 6-11, 2-11, 11-7, 13-15, 11-9, 7-11) என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.Advertisement