காமன்வெல்த் ஹாக்கி: இந்திய பெண்கள் ‘வெண்கலம்’

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது. பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு பெண்களுக்கான ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் இந்தியாவின் சலிமா டெட், முதல் கோல் அடித்தார். இதற்கு, 60வது நிமிடத்தில் நியூசிலாந்தின் ஒலிவியா மெர்ரி, ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.பின் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்திய அணிக்கு சோனிகா, நவ்னீத் கவுர் கோல் அடித்தனர். இதன்மூலம் 16 ஆண்டுகளுக்கு பின், காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் ஹாக்கியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.

Advertisement