‘தங்க மகன்’ லக்சயா சென் * பாட்மின்டில் அபாரம்

பர்மிங்காம்: காமன்வெல்த் பாட்மின்டனில் ஆண்கள் ஒற்றையரில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் தங்கம் கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்தில் 22வது காமன்வெல்த் விளையாட்டு பர்மிங்காமில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் 20, மலேசியாவின் டிஜி யோங்கை எதிர்கொண்டார். இழுபறியாக இருந்த முதல் செட்டை லக்சயா 19-21 என இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர், இரண்டாவது செட்டில் துவக்கத்தில் இருந்து முன்னிலை பெற்றார். முடிவில் லக்சயா 21-9 என எளிதாக கைப்பற்றினார்.

வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய லக்சயா, 21-16 என வசப்படுத்தினார். முடிவில் லக்சயா 19-21, 21-9, 21-16 என வெற்றி பெற்று, காமன்வெல்த் பாட்மின்டனில் முதன் முறையாக தங்கப்பதக்கம் பெற்றார். பிரகாஷ் படுகோன் (1978), சையது மோடி (1982), காஷ்யப்பிற்கு (2014) பின் காமன்வெல்த்தில் தங்கம் வென்ற வீரர் ஆனார் லக்சயா.

Advertisement