சாத்விக்சாய்ராஜ்–சிராக் ஜோடி தங்கம்

பர்மிங்காம்: காமன்வெல்த் பாட்மின்டன் ஆண்கள் இரட்டையரின் முதன் முறையாக இந்தியா தங்கம் கைப்பற்றியது. இங்கிலாந்தில் 22வது காமன்வெல்த் விளையாட்டு பர்மிங்காமில் நடந்தது. ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன், சீன் லெண்டி ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை இந்தியா ஜோடி 21-15 என கைப்பற்றியது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி அடுத்த செட்டையும் 21-13 என எளிதாக வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 21-15, 21-13 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றியது.

காமன்வெல்த் பாட்மின்டன் ஆண்கள் இரட்டையரில் இந்தியா தங்கம் வென்றது இது தான் முதன் முறை.

Advertisement