பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்கள்

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என, மொத்தம் 61 பதக்கம் கிடைத்தன.61

இம்முறை இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என, 61 பதக்கம் கிடைத்தன. கடந்த முறை (2018, கோல்டு கோஸ்ட்) 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என, 66 பதக்கம் கிடைத்தது. டில்லி (2010) காமன்வெல்த் விளையாட்டில் 101 பதக்கம் (38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம்) வென்றதே இந்தியாவின் சிறந்த செயல்பாடு.564

காமன்வெல்த் விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்கு இதுவரை 203 தங்கம், 190 வெள்ளி, 171 வெண்கலம் என, மொத்தம் 564 பதக்கம் கிடைத்துள்ளன. ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என, மொத்தம் 61 பதக்கம் கிடைத்தன. இதன் விவரம்:வீரர்/வீராங்கனை போட்டி பிரிவு பதக்கம்

தங்கம் வென்றவர்கள்

மீராபாய் பளுதுாக்குதல் பெண்கள் 49 கிலோ

ஜெரிமி பளுதுாக்குதல் ஆண்கள் 67 கிலோ

அசிந்தா பளுதுாக்குதல் ஆண்கள் 74 கிலோ

இந்தியா 'லான் பவுல்ஸ்' பெண்கள் அணி (4 பேர்)

இந்தியா டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணி

சுதிர் பாரா பவர்லிப்டிங் ஆண்கள் ஹெவிவெயிட்

பஜ்ரங் மல்யுத்தம் ஆண்கள் 65 கிலோ

சாக் ஷி மல்யுத்தம் பெண்கள் 62 கிலோ

தீபக் மல்யுத்தம் ஆண்கள் 86 கிலோ

ரவி குமார் மல்யுத்தம் ஆண்கள் 57 கிலோ

வினேஷ் மல்யுத்தம் பெண்கள் 53 கிலோ

நவீன் மல்யுத்தம் ஆண்கள் 74 கிலோ

பவினா பாரா டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் (சி3-5)

நீத்து குத்துச்சண்டை பெண்கள் 48 கிலோ

அமித் பங்கல் குத்துச்சண்டை ஆண்கள் 51 கிலோ

எல்தோஸ் பால் தடகளம் ஆண்கள் 'டிரிபிள் ஜம்ப்'

நிகாத் ஜரீன் குத்துச்சண்டை பெண்கள் 50 கிலோ

சரத் கமல்-ஸ்ரீஜா டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர்

சிந்து பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர்

லக்சயா சென் பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர்

சாத்விக்-சிராக் பாட்மின்டன் ஆண்கள் இரட்டையர்

சரத் கமல் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர்வெள்ளி வென்றவர்கள்

சங்கேத் பளுதுாக்குதல் ஆண்கள் 55 கிலோ

பிந்த்யாராணி பளுதுாக்குதல் பெண்கள் 55 கிலோ

சுஷிலா ஜூடே பெண்கள் 48 கிலோ

விகாஸ் பளுதுாக்குதல் ஆண்கள் 96 கிலோ

இந்தியா பாட்மின்டன் கலப்பு அணி

துலிகா ஜூடோ பெண்கள் 78 கிலோ

ஸ்ரீசங்கர் தடகளம் ஆண்கள் நீளம் தாண்டுதல்

அன்ஷு மல்யுத்தம் பெண்கள் 57 கிலோ

பிரியங்கா தடகளம் பெண்கள் 10000 மீ., நடை

அவினாஷ் தடகளம் ஆண்கள் 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்'

இந்தியா 'லான் பவுல்ஸ்' ஆண்கள் அணி (4 பேர்)

அப்துல்லா தடகளம் ஆண்கள் 'டிரிபிள் ஜம்ப்'

சத்யன்-சரத் கமல் டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர்

இந்தியா கிரிக்கெட் பெண்கள் அணி

சாகர் குத்துச்சண்டை ஆண்கள் 92 கிலோ

இந்தியா ஹாக்கி ஆண்கள் அணிவெண்கலம் வென்றவர்கள்

குருராஜா பளுதுாக்குதல் ஆண்கள் 61 கிலோ

விஜய் குமார் ஜூடோ ஆண்கள் 60 கிலோ

ஹர்ஜிந்தர் கவுர் பளுதுாக்குதல் பெண்கள் 71 கிலோ

லவ்பிரீத் பளுதுாக்குதல் ஆண்கள் 109 கிலோ

கோஷல் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர்

குர்தீப் பளுதுாக்குதல் ஆண்கள் 109 கிலோ

தேஜஸ்வின் தடகளம் ஆண்கள் உயரம் தாண்டுதல்

திவ்யா மல்யுத்தம் பெண்கள் 68 கிலோ

மோகித் மல்யுத்தம் ஆண்கள் 125 கிலோ

ஜாஸ்மின் குத்துச்சண்டை பெண்கள் 'லைட்வெயிட்'

பூஜா கெலாட் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ

பூஜா சிஹாக் மல்யுத்தம் பெண்கள் 76 கிலோ

ஹுசாமுதீன் குத்துச்சண்டை ஆண்கள் 'பெதர்வெயிட்'

தீபக் நெஹ்ரா மல்யுத்தம் ஆண்கள் 97 கிலோ

சோனல்பென் பாரா டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் (சி3-5)

ரோகித் குத்துச்சண்டை ஆண்கள் 'வெல்டர்வெயிட்'

இந்தியா ஹாக்கி பெண்கள் அணி

சந்தீப் தடகளம் ஆண்கள் 10000 மீ., நடை

அன்னு ராணி தடகளம் பெண்கள் ஈட்டி எறிதல்

தீபிகா-கோஷல் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர்

ஸ்ரீகாந்த் பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர்

காயத்ரி-திரீசா பாட்மின்டன் பெண்கள் இரட்டையர்

சத்யன் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர்மல்யுத்தம் ஆதிக்கம்

இம்முறை இந்தியாவுக்கு மல்யுத்தப் போட்டியில் அதிகபட்சமாக 6 தங்கம் உட்பட 12 பதக்கங்கள் கிடைத்தன. டேபிள் டென்னிஸ் 4, பளுதுாக்குதல், குத்துச்சண்டை, பாட்மின்டனில் தலா 3, 'லான் பவுல்ஸ்', 'பாரா பவர்லிப்டிங்', தடகளத்தில் தலா ஒரு தங்கம் கிடைத்தன.0

இம்முறை சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், டிரையத்லான் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை.அடுத்து ஆஸ்திரேலியாவில்

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு நிறைவடைந்தது. இதன் 23வது சீசன், வரும் 2026ல் ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடக்கவுள்ளது. இது, ஆஸ்திரேலிய மண்ணில் நடத்தப்படும் 6வது காமன்வெல்த் விளையாட்டு. இதற்கு முன், சிட்னி (1938), பெர்த் (1962), பிரிஸ்பேன் (1982), மெல்போர்ன் (2006), கோல்டு கோஸ்ட் (2018) நகரங்களில் நடத்தப்பட்டன. இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்டை அதிக முறை நடத்திய நாடுகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது.

Advertisement