ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர்.
துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும்,
பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில்
சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும்
நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும்
சாஸ்திரங்கள் கூறுகின்றன. துலாக் காவேரியின் நீர்த்திவலைகள்
ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள்.
அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில்
நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன.
துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும்
சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். மேலும் துலா
மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து
அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள்.
அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம்
கிட்டுமென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது. ஆதி, இடை, கடை என்னும்
மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் பகவான்
நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும்
தன்னிகரற்றது.வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என
காவிரியின் பெருமையை விவரிப்பதே துலா புராணம் ஆகும். ஐப்பசி மாதத்தில்
தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே துலா ஸ்நானம்
வழிபாடாகும். இதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி 2 நாட்களில் நீராடுவது
மிகவும் சிறப்பு. காவிரியில் புனித நீராடிய பிறகு துலா புராணத்தினை
முழுவதுமாகவோ அல்லது ஒவ்வொரு பகுதியாகவோ தினமும் படிப்பது சகல நலன்களையும்
தரும். பொதுவாக 2 நதிகள் கூடும் இடத்தை கூடுதுறை அல்லது சங்கமம் என்று
கூறுவோம். தமிழ்நாட்டில் பவானி, உ.பி.யில் அலகாபாத், கர்நாடகாவில்
திருமுக்கூடல் ஆகியவைகள் மிகவும் சிறப்பு வாய்ந்த சங்கம இடங்களாகும். ஒரு
சமயம் சிவன் தன் வாகனமான இடபத்தின் மீது ஏறி உலகை சுற்றி வந்தார். அப்போது
இடப வாகனம் செருக்கடைந்து சுற்றி வந்து காவிரியின் நடுவில் தங்கி விட்டது.
அதன் கர்வத்தை அடக்க சிவன் தன் கால் விரலை ஊன்றி அதை பாதாளத்தில்
அமிழ்த்தி விட்டார். பிறகு இடபம் மனம் வருந்தி இறைவனை வேண்ட சிவனும்
மனமிறங்கி அந்த இடபத்தை அங்கேயே இருந்து காவிரியில் நீராடுவோர்க்கு
அருள்புரிந்து வருமாறு கட்டளையிட்டு மறைந்தார். வானா அரசன் வாலி சிறந்த
சிவபக்தன். அவன் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடு துறையில் அருளுகின்ற
சிவனை வழிபட்டு வந்தான் என்றும், அவனே பிற்காலத்தில் ராவணனை ஒடுக்கியவன்
என்றும் திருஞானசம்பந்தர் தன் பாடலில் தெரிவிக்கிறார். காவிரியிலிருந்து
வெகுதூரத்தில் இருப்பவர்கள் ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட
செல்லலாம். இயலாதவர்கள் தாங்கள் நீராடும் நதியையே காவிரியாக கருதி
நீராடுவது நல்லது. ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி. ஆயிரம் வருஷம்
கங்கையில் தினம் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம்
ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும்
என்பது ஐதீகம்.
நல்ல நேரம்
:
9.00 - 10.30
ராகு
:
10.30 - 12.00
குளிகை
:
7.30 -9.00
எமகண்டம்
:
3.00 - 4.30
திதி
:
பஞ்சமி
திதி நேரம்
:
சதுர்த்தி
கா
6.04
நட்சத்திரம்
:
ரோகிணி
மா
4.06
யோகம்
:
மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம்
:
அனுஷம்,கேட்டை
சூலம்
:
மேற்கு
பரிகாரம்
:
வெல்லம்
வரலாற்றில் இன்று :
நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது(1991)
பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)
டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது(1954)
கம்ப்யூட்டரை கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் இறந்த தினம்(1871)
அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம்(1931)
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.