சென்னை : மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில், உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபம், மாட்சிமை அரங்கத்தில், கம்பன் விழா இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
முதல் நாள் நிகழ்ச்சியில், கம்பன் கழக தலைவர், ஆர்.எம்.வீரப்பன், வரவேற்புரை நிகழ்த்த உள்ளார். நீதிபதி அரு.இலக்குமணன் தலைமை வகிக்கிறார்.நீதிபதி, வெ.ராமசுப்பிரமணியன் எழுதிய 'கம்பனில் சட்டமும் நீதியும்' நுாலை, நீதிபதி அரு.இலக்குமணன் வெளியிட, நல்லி குப்புசாமி பெறுகிறார்.'மூன்றெழுத்தில் முழுக் காப்பியம்' பாரதியின் 'புதிய ஆத்திசூடி' ஒலிப்பேழைகளை, அவ்வை நடராஜன் வெளியிட, ஏ.எம்.சுவாமிநாதன் பெறுகிறார். கம்பர் விருதை, ஆர்.செல்வக்கணபதியும், நினைவு பரிசை, ஆர்.மோகனும் பெற உள்ளனர். கவிஞர் தணிகைச்செல்வன், கீழாம்பூர், தமிழ்முடி, ஆர்.ராசேந்திரன் (தேவிரா), டி.எஸ்.ராமலிங்கம், இசைக்கவி ரமணன், மு.அப்துல் ரசாக், எழுத்தாளர் மாலன், அருணை. பாலறாவாயன், இலங்கை ஜெயராஜ், செல்வன் த.திருமாறன், செல்வி அனுகிரகா ஆதிபகவன் ஆகியோர் நினைவு பரிசு பெற உள்ளனர்.