இருப்பது ஏதோ இருக்கிறது... வருவதாவது வாய்க்குமா? தரமான விரிவான 'ரிங் ரோடு' வேண்டும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2014
02:10

மதுரை : மதுரை ரிங் ரோடு பராமரிப்பு படுமோசமாக இருக்கும் நிலையில் தொடங்க உள்ள அதன் விரிவாக்க பணியாவது வாகன ஓட்டிகளின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக இருக்க வேண்டும்.

இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் மதுரையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நகரைச் சுற்றி 27.2 கி.மீ.,க்கு ரூ.47.35 கோடியில் ரிங் ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.47.35 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரூ.14 கோடி அரசுமானியமும், தமிழ்நாடு நகர் மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.33.35கோடி கடன் பெற்று திட்டம் நிறைவேற்றப்பட்டது.திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது என்னவோ வட்ட வடிவில். பணி நடந்ததோ அரை வட்ட வடிவில். சோழவந்தான் வரை ரிங் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டும் இதுவரை பணி நடைபெறவில்லை.
நடந்த பணிக்கு பெற்ற கடன் தொகையை 6 மாதத்திற்கு ஒரு முறை வீதம் 15 ஆண்டுகளில் திருப்பிச்செலுத்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. சுங்க வசூல் மூலம் கடனை செலுத்த மாநகராட்சிக்கு அனுமதியளிக்கப்பட்டது.

கடன் எவ்வளவு?
ரிங்ரோடு பணிக்காக வெளிச்சந்தையிலிருந்து பெற்ற கடன் பத்திரங்களின் மதிப்பு ரூ.29 கோடி. செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.17கோடியே 77 லட்சத்து 80 ஆயிரத்து 870. அதற்கான வட்டி ரூ.7 கோடியே 84லட்சத்து 23 ஆயிரத்து 46.ரிங் ரோடு வசூலை முறையாக செலுத்தியிருந்தால் இந்நேரம் கடனை அடைத்து ரிங் ரோடு மேல் மேம்பாலமே அமைத்திருக்கலாம். ஆனால் ஆளாளுக்கு போட்டி போட்டு ரிங் ரோடு வசூலை சூறையாடியதால் இன்னும் மாநகராட்சி கடனை செலுத்தாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் கொஞ்சமல்ல ரூ.25 கோடியே 62லட்சத்து 8 ஆயிரத்து 916.

2015 அக்.,31 உடன் மாநகராட்சியின் ரிங் ரோடு வசூல் உரிமம்நிறைவு பெறுகிறது. ஆனாலும் அதை விட்டுத்தர மாநகராட்சிக்கு மனமில்லை. கடனை காரணம் காட்டி தங்களுக்கு வசூல் செய்யும் உரிமையை நீட்டிப்பு செய்யுமாறு கடிதங்கள் பறந்து கொண்டிருந்த வேளையில் அரசு தரப்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியானது. ரிங் ரோட்டை விரிவாக்கம் செய்யவிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு ஆய்வுகளும் நடந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை மூலம் இப்பணி நடைபெற இருப்பதாக தெரிகிறது. விரிவாக்கம் அவசியமானது தான்.

அதே நேரத்தில் தற்போது அமைந்துள்ள ரோட்டின் தரத்தையும் ஆய்வு செய்து அதற்கேற்ப மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. ஆண்டு தோறும் ரிங் ரோடு பராமரிப்பு பணி நடப்பதாக ஆவணங்களில் கூறப்படுகிறது. ஆனால் ரோட்டின் லட்சணத்தை பார்த்தால் பராமரிப்புக்கும் அதற்கும் தொடர்பில்லை.அவ்வப்போது வி.ஐ.பி.,கள் வருவதால் மதுரையை ஒட்டிய ரோட்டில் மட்டும் மராமத்து செய்து வைத்துள்ளனர். புளியமரம் ஸ்டாப், சம்பக்குளம் பகுதியை நெருங்கிவிட்டால் அங்குள்ள பள்ளங்களால் வாகனங்கள் நொறுங்கிவிடுகின்றன. 'கேப்' இல்லாமல் வசூல் செய்யும் 'டோல் கேட்' இருக்கிறது. அதே அளவிற்கு 'கேப்' இல்லாமல் சேதமும் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்கட்டும்; இருக்கும் ரோட்டை விரிவாக்கம் செய்வது சரி, ஏற்கனவே பாதியில் நிற்கும் ரோட்டை முழுமை செய்வது எப்போது?

பராமரிக்க வசதி இல்லை : திட்டத்தை நிறைவு செய்யாமல் விரிவாக்கம் செய்வதில் என்ன பயனிருக்கும்? ஏற்கனவே மாநகராட்சியில் பணியாளர் பற்றாக்குறை. இதில் ரிங் ரோட்டிற்காக சிலரை நியமித்து இருக்கும் பணியை இழுத்துப் போடுகின்றனர்.ரோட்டை பராமரிக்கும் அளவிற்கு போதிய ஆட்கள், இயந்திரங்கள் வசதி இல்லை. அப்படியிருக்கும் போது உரிய துறையினரிடம் அதை ஒப்படைப்பது தான் சரியானது.அந்த வகையில் விரிவாக்கத்திற்கு பின் நெடுஞ்சாலைத்துறையே ரிங் ரோடு பராமரிப்பை ஏற்க அரசு வழிவகை வேண்டும்.இனி வரக்கூடிய ரோடாவது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் படி ஆராய்ந்து புதிய ரிங் ரோடு அமைய நடவடிக்கை வேண்டும்.

கட்டணம் உயர்கிறது; திட்டம் நிறைவேறவில்லை : ரிங் ரோடு திட்டத்தை முழுமைபடுத்த இதுவரை முயற்சி எடுத்தார்களோ இல்லையோ, ஆண்டுக்கு தோறும் சுங்க வசூல் கட்டணத்தை உயர்த்த தவறியதில்லை.
* 2011 ஆக.,29ல்நடந்த மாநகராட்சி கூட்டத்தில் 2011நவ.,1 முதல் 2012 அக்.,31வரை 8 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.
* 2012 அக்.,31ல் நடந்த கூட்டத்தில் 2012 நவ., 1 முதல் 2013 அக்.,31வரை மீண்டும் 8 சதவீதம் உயர்த்தினர்.
* 2013 ஜூலை 26ல் நடந்த கூட்டத்தில் 2013 நவ.,1 முதல் 2014 அக்.,31 வரை மீண்டும் 8 சதவீதம் உயர்த்தப்பட்டது.

வசூல் ஓஹோ...
ரிங் ரோடு திட்டத்திற்கு ரூ.47.35 கோடி கடன் பெற்றார்கள் என்றால் இதுவரை வசூலானது எவ்வளவு தெரியுமா? 2001மார்ச் 31 முதல் 2014 ஜன.,4 வரை வசூலானது ரூ.114 கோடியே 27 லட்சத்து 78 ஆயிரத்து 775 ரூபாய் 80 காசு. ஆனாலும் கடன் அடைக்கப்படவில்லை. சரி பராமரிப்பிற்கு செலவழித்திருக்கிறார்களா என்றால் ரோட்டில் பயணிக்கும் போது அதுவும் பொய்யாகிறது. அப்படியானால் வசூல் செய்தது எங்கு தான் போனது? போகிறது?

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X