திருச்சி: திருச்சியில், எய்ட்ஸ் நோயை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர், 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. திருச்சியில், நேற்று எய்ட்ஸ் இல்லாத உலகத்தை உருவாக்கும் நோக்கத்தில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. தென்னூர் உழவர் சந்தையில் துவங்கிய பேரணியை, மாநகரா ட்சி நகர்நல அலுவலர் மாரியப்பன் தொடங்கி வைத்தார். சாஸ்திரி ரோடு, கரூர் பைபாஸ் வழியாக, சத்திரம் பஸ் ஸ்டாண்டில் பேரணி நிறைவடைந்தது. உயர்கொல்லி நோயான எய்ட்ஸுக்கு எதிரான பாதைகைகளை கையில் ஏந்தி, மாணவர்கள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.