முதலில் பக்தியை சம்பாதியுங்கள்.. பிறகு பணத்தை சம்பாதியுங்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2015
01:00

ராமாயணம், மகாபாரதம் போன்ற வீரகாவியங்களை, சொற்பொழிவு வாயிலாக, மக்களுக்கு உபதேசம் செய்து வரும் சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன். கடல் கடந்தும், விமானத்திலும் பல நாடுகளுக்கு சென்று சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது:

கதாகாலட்சேபம் செய்யும் பணியை தானாக தேர்வு செய்தீர்களா? விரும்பி ஏற்றுக்கொண்டீர்களா?
கடவுள் அனுக்கிரஹத்தால் இப்பணி கிடைத்தது. ஆறு வயதிலேயே, சொற்பொழிவையும், உபன்யாசத்தையும், கதாகாலட்சேபத்தை கேட்டேன். தந்தையிடம் சொற்பொழிவையும், தாயாரிடத்தில் இசையையும் கற்றேன். பி.எஸ்சி., கணிதத்தில் பட்டம் பெற்றேன். ஸ்ரீரங்கத்தில் எனது சொற்பொழிவை துவக்கினேன்.

எதைப்பற்றி எங்கெல்லாம் உபன்யாசம் செய்திருக்கிறீர்கள்?
நம் நாட்டின் வீரகாவியங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவை பற்றியும், பெரியபுராணம், கந்தபுராணம், திருப்பாவை, திவ்யப்பிரபந்தம் குறித்தும் சொற்பொழிவு, உபன்யாசம், கதாகாலட்சேபம் செய்து வருகிறேன். இந்தியா மட்டுமல்ல, இலங்கை, சிங்கப்பூர், குவைத், லண்டன், நைரோபி, ஜாம்பியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் நடத்தியிருக்கிறேன்.

சொற்பொழிவுக்கும், கதாகாலட்சேபத்துக்கும் இடையே வித்தியாசம் என்ன?
இடைவிடாமல் தொடர்ந்து வார்த்தைகளாலும், வசனங்களாலும் பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் பேசுவது சொற்பொழிவு. ஒவ்வொரு விஷயத்துக்கும், புரியும் படியாக, கதையை சொல்லி அதன்பின், விஷயத்தை சொல்லி புரியவைப்பது கதா காலட்சேபம். ஒரு கருத்தைச்சொல்லி அதற்கேற்ப பாடலைப்பாடி, அதன் பின், அதற்கான அர்த்தத்தை பார்வையாளர்களுக்கு புரியவைப்பது உபன்யாசம்.

ஆன்மிகத்தை மக்கள் விரும்புகின்றனரா?
இன்றைய அவசரமான உலகில், ஆன்மிகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சில வாய்ப்பு கிடைத்தாலும், பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. ஆன்மிக தேடல் மனதுக்கு அமைதி கொடுக்கும், கோபம், தாபம், வன்முறைகள் கட்டுப்படுத்தும். இதன் வாயிலாக, அமைதி நிலவும்.

சொற்பொழிவு கேட்பதில் நம்மவருக்கும், வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
இந்தியாவில் வசித்தவர்கள் தான் அங்கும் இருக்கின்றனர். பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை. இடம் தான் வேறுபட்டுள்ளது.

உங்களது நோக்கம் என்ன?
தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சென்று கொண்டிருக்கிறேன். பள்ளிகள்தோறும் இலக்கியமன்றங்களில், ராமாயணம், மகாபாரதம் சொற்பொழிவு நடத்தி, இளைய தலைமுறையை நல்வழிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளேன்.

மக்களுக்கு, உங்களது வேண்டுகோள்...
முதலில் பக்தியை சம்பாதி; பிறகு பணத்தை சம்பாதி. மாற்றி சம்பாதித்தால் வாழ்க்கையில் நிம்மதியை இழக்கும் சூழல் ஏற்படும். இளைஞர்கள், ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை இளமையில் கற்கவேண்டும். ஆழ்ந்து படிக்க வேண்டும். இதில் அனைத்து விஷயங்களும் பொதிந்துள்ளன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X