மனசை முத்தமிட்ட முத்தமிழ் விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2015
01:06

'காந்தி உழைத்தார் நாட்டுக்காக...! நாம் உழைக்கிறோம் காந்தி நோட்டுக்காக...!

தற்கால மனிதரின் அன்றாட வாழ்க்கை இப்படி பொருளாதார தேடலுக்கான பயணமாகவே தினமும் சென்றுகொண்டிருக்கிறது. இப்படி, பொருளாதாரம் குறித்து சிந்திக்கும் வேளையில், 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' என்ற பாதையை கொஞ்சமாவது தேர்ந்தெடுத்தால் தான், உடம்பும், மனசும் காற்றில் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.அதுபோன்ற ஒரு உணர்வை தந்தது, கோவை தொழில்நுட்பக் கல்லுாரியில் நேற்று துவங்கிய, 'முத்தமிழ் விழா - 2015'. கிராமியக் கலையை முன்னிறுத்தி நடத்திய அத்தனை நிகழ்வுகளும், காற்றுக்கே ஏற்படுத்தியது குளிர்ச்சி. தவில், பறை, தமிழர் விளையாட்டான கபடி, தமிழ் சார்ந்த பேச்சுப் போட்டிகள், தாய்மொழியில் அறிவியல், தமிழ் ஆய்வரங்கம் போன்ற நிகழ்ச்சிகள், 'இதற்கு தானே இத்தனை நாளாய் ஆசைப்பட்டோம்' என்ற மகிழ்ச்சியில், உதட்டை குவிக்க வைத்தது.

அடடா... ஒரு நாளைக்குள் எல்லாம் முடிந்து விட்டதா என்றால், நாளை மாலை, 'இக்காலக் கல்வி முறைக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது ஆசிரியர்களே! பெற்றோர்களே! இணையமே!' என்ற தலைப்பில், அறிவுக்கு, 'சூடான' பட்டிமன்ற விவாதம் நடக்கிறது. கிராமிய மணம் வீசும் நடனம் மனதுக்கு இதம் அளிக்க காத்திருக்கிறது. வரும் 8ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில், 'மண் வாசனை'க்கு கட்டாய உத்தரவாதம்.இதுபோன்ற நிகழ்ச்சிகளின் உயிர், வேர் பிடித்துக் கொண்டிருக்கும் வரை, 'எனக்கு 'டமில்' கொஞ்சம், கொஞ்சம் தான் வரும்' என்ற பேச்சுக்கே இடமில்லை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X