குரோம்பேட்டை: 'பேஸ்புக்' போலி கணக்கில், டாக்டர் போல் நடித்து, பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து, 40 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.போலீசில் புகார்குரோம்பேட்டையில் பிரபல வழக்கறிஞர் ஒருவர், தன் வீட்டில் இருந்த, 10 சவரன் நகைகளை, மர்மநபர்கள் திருடியதாக போலீசில் புகார் அளித்தார். விசார ணையில், வழக்கறிஞரின்மகள், 'பேஸ்புக்'கில் பழகிய ரகமத்துல்லா, 27, என்பவனிடம் நகைகளை இழந்ததாக தெரியவந்தது. போலீசார், அவனது 'பேஸ்புக்' கணக்கை சோதனையிட்டனர். அதில், ரகமத்துல்லா, தான் ஒரு டாக்டர் என போலியான தகவல்களை அளித்தது தெரியவந்தது. அவனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவனது, 'பேஸ்புக்' கணக்கை தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்ததில், அவனுடன் வேறொரு பெண், தொடர்பில் இருந்தது தெரிந்தது. போலீசார் அந்த பெண்ணின் உதவியுடன், ரகமத்துல்லாவை கைது செய்தனர். விசாரணையில், அவன் விழுப்புரம் மாவட்டம், கோட்டைக்குப்பம் பகுதியை சேர்ந்த, அசன் அலி என்பவரின் மகன், என்பது தெரியவந்தது.'பேஸ்புக்' கணக்கில் அவன் தன்னை டாக்டர் என, அறிமுகம் செய்துகொண்டு, பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது, தெரியவந்தது. சிறையில் அடைப்புரகமத்துல்லாவிடம் இருந்து, 40 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவனை கைதுசெய்து, குரோம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவனை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.