மாலை நேர சிற்றுண்டி முடங்க யார் காரணம்? அதிகாரிகள் தீவிர விசாரணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2015
07:36

கோவை : மாநகராட்சி பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம், கடந்தாண்டு துவங்கப்பட்டது. இந்தாண்டு, திட்டத்தை செயல்படுத்த தவறிய, கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் போது, சோர்வு மற்றும் பசியை போக்கும் வகையில், மாலை நேர சிற்றுண்டி திட்டம், கடந்தாண்டு துவங்கப்பட்டது. இதற்காக, பட்ஜெட்டில், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டு, ஜன., மாதம் இந்த திட்டம் துவங்கப்பட்டது.சிற்றுண்டியாக சோயா சுண்டல் - 100 கிராம், கருப்பு கொண்டை கடலை சுண்டல் -100 கிராம், பாசிப்பயறு சுண்டல் -85 கிராம் (இதில், ஏதாவது ஒன்று); ராகி புட்டு -100 கிராம், மக்காச்சோளப்புட்டு - 100 கிராம், அரிசி புட்டு -100 கிராம் (இதில், ஏதாவது ஒன்று); சுக்கு டீ - 100 மி.லி., வல்லாரை சூப் -150 மி.லி.,, தூதுவளை சூப் - 150 மி.லி., (இதில், ஏதாவது ஒன்று) வழங்கப்பட்டது.சிற்றுண்டி பொருட்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு பிரித்து, மாலை 4:00 மணிக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதற்காக, ஒரு மாணவனுக்கு ஒரு நாளுக்கு 25 ரூபாய் செலவிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு, பெற்றோர், மாணவர்கள் மத்தியில், வரவேற்பு கிடைத்தது.


இந்த ஆண்டும், சிற்றுண்டி திட்டம் துவங்கப்படும் என, மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர். அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, ஜன., 2ல், பள்ளிகள் திறக்கப்பட்டதும், பொதுத்தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் துவங்கி விட்டன. ஒன்றரை மாதங்களான நிலையிலும், மாலை நேர சிற்றுண்டி வழங்கவில்லை. திட்டம் கைவிடப்பட்டதா அல்லது சிற்றுண்டி வழங்கப்படுமான என்ற விபரமும் அறிவிக்கப்படவில்லை.பொதுத்தேர்வு மாணவர்களுக்காக, மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்ட, சிறப்பு வினா - வங்கி புத்தக திட்டமும் கைவிடப்பட்ட நிலையில், சிற்றுண்டியும் வழங்கவில்லை. மாநகராட்சி பள்ளி மாணவர்களை, தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்த வேண்டும் என்பதற்காக, 'சூப்பர் -30' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பழைய திட்டங்கள் கேள்விக்குறியாகியுள்ளன.


மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சி கமிஷனர், துணைகமிஷனர் ஆகியோர் சமீபத்தில் தான் பொறுப்பேற்றனர். ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி, கல்வித்துறை அதிகாரிகள், கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் பார்வைக்கு கொண்டு செல்லவில்லை.கடைசி நேரத்தில், சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த, மூன்று நிறுவனங்களிடம் மதிப்பீடு பெற்று, பைல் வைக்கப்பட்டது. ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் என்பதால், மூன்று மாதங்களுக்கு முன்பே, அறிவிப்பு வெளியிட்டு, டெண்டர் பெற்று, சிற்றுண்டி தயாரிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்திருக்க வேண்டும்.இந்த நடைமுறைகளை எதையும் கடைபிடிக்காமல், லெட்டர் பேடில், மதிப்பீடு பெற்று கொடுத்ததால், கடைசி நேரத்தில் சிற்றுண்டி திட்டம் கைவிடப்பட்டது. டிசம்பர் மாதத்தில் தான் பைல் வைக்கப்பட்டது. அதன்பின், டெண்டர் நடைமுறையை கடைபிடித்தால், மாணவர்களுக்கு உரிய காலத்தில் சிற்றுண்டி வழங்க முடியாது. மாநகராட்சியின் சிறப்பு திட்டத்தை தொடர்ந்து கடைபிடித்து, திட்டத்தை செயல்படுத்த தவறிய, கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
01-மார்-201512:06:29 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> புட்டுதவிர இதவகைகள் பசி ஆற்றாது ங்க பசிய தூண்டும் , ஆனால் ராகிகஞ்சி கம்புகஞ்சி புளுங்கலரிசிகஞ்சி உப்பும் மோரும் செர்த்துகுடுத்தால் தெம்பாக இருக்கும் பசியும் தெரியாது சுண்டால்களும் தரலாம் புரத சத்து. மாணவர்களுக்குஇல்லே பல ஒல்தேஜ் ஹோம்களில் பகலுனவுக்கு பிறகு பிற்பகல் 31/2மனிக்குகாபி / தேநீர் கூடவெ மாரிபிச்கட்டும் தருவாக அதவும் வேஸ்ட் வெறும் 3 மாரிஆர் கிரேக் ஜேக் தருவாக பல்லுபோனவாளாலே தின்னவேமுடிலேயே , ஹோம்லே இருக்கரவாளிடமே துட்டுவாங்கின்னு கன்றாவியா வேகாத சோறும் தன்நீர்கலந்தபாலுமே தராங்க , தனியார் நடத்தும் ஹோம்களிலே ரொம்பவே காமன் ஸீன், முடியலேன்னுதான் பலர் இந்த ஹோம்களுக்கே வராக , அவா வயத்துலே அடிக்கலாமா??????/பல பெரியவங்க வாயே திறக்காமல் போட்டதை துன்னுட்டு போவுராக ,சிலர் பிடிக்கலேன்னு சொள்ளப்யந்துண்டு 1/2 வயறு கால்வய்ருன்னு துன்ராக , இவாளிடம் துட்டுவாங்கிட்டு மேலும் மேலும் ஹோம்கள் கட்டியே கொளிக்குராங்க . மாணவர்களோ கிழவர்கலொ ரொம்பவே பாவம் பண்ணவா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X