பூச்சாண்டி வார்த்தையா 'பின் நவீனத்துவம்?' புரிய வைக்கிறார் எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2015
04:30

உலக அளவில், கலை இலக்கிய கோட்பாடுகளில், 'பின் நவீனத்துவம்' என்ற சொல் மையப்பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்திய மொழிகளில், தமிழ் இலக்கியத்தில்தான் இதுகுறித்து அதிகம் பேசப்படுகிறது.

பின் நவீனத்துவம் கூறுகளை தன் படைப்புகளில் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ். தமிழில் ஐந்து பின் நவீனத்துவ நாவல்களை எழுதிய முதல் எழுத்தாளர் இவர்.இதுவரை, 25 நுால்களுக்கு மேல் எழுதியிருக்கும் இவருக்கு, பல்வேறு இலக்கிய அமைப்புகள் விருது வழங்கி பாராட்டி உள்ளன. சமீபத்தில், கோவை வந்திருந்த இவர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி.

பின் நவீனத்துவ கோட்பாடு என்றால் என்ன?
பின் நவீனத்துவம் என்பது கோட்பாடு இல்லை. அது ஒரு பகுப்பாய்வு முறை. நவீனத்துவ கோட்பாடு அடிப்படையில் ஒரு கருத்தை முன் வைக்கும்போது, அதற்கு எதிரான விமர்சனத்தை பின்நவீனத்துவம் முன் வைக்கிறது. இலக்கிய கட்டுமானங்களை கட்டுடைத்தல், மையம் தகர்த்தல் என்பது பின் நவீனத்துவ தத்துவத்தின் முக்கிய கூறுகள். கலை, இலக்கியம், அரசியல் மற்றும் சமூக அமைப்புகளிலும் பின் நவீனத்துவ கூறுகள் உள்ளன.

பின் நவீனத்துவம் என்ற சொல் தமிழ் வாசகர்களை பயமுறுத்தும்ஒரு 'பூச்சாண்டி' வார்த்தையாகவே இருக்கிறதே?
ஆரம்பத்தில் தமிழ் எழுத்தாளர்கள் பல பின் நவீனத்துவம் என்ற சொல்லை வாசகர்களை மிரட்டும் சொல்லாகதான் பயன்படுத்தி வந்தனர். வாசகர்களுக்கு புரியவில்லை என்றால் அதை படைப்பாளி விளக்க வேண்டும், தெளிவுபடுத்தி எழுதவேண்டும். நான் பின்நவீனத்துவம் குறித்து விளக்கமாக பல கட்டுரைகளை எழுதினேன். இந்த கருத்தை முன் வைத்த ஐரோப்பிய சிந்தனையாளர்கள் தெரிதா, பூக்கோ உள்ளிட்ட பலரை பற்றி தனித்தனியாக நுால்கள் எழுதியிருக்கிறேன். இந்நுால்களை படித்த பலர் பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பதை எளிமையாக புரிந்துள்ளனர்.

சாதாரண நாவலுக்கும், பின் நவீனத்துவ நாவலுக்கு உள்ள வித்தியாசம் என்ன?
சாதாரண நாவலில் கதை நேர் கோட்டு வரிசையில் சொல்லப்படும். பின்நவீனத்துவ நாவலில் அப்படி இருக்காது. கதை களைந்து கிடக்கும். சாதாரண நாவலுக்கு ஒரு முடிவுதான் இருக்கும், இந்நாவலுக்கு பல முடிவுகள் இருக்கும். சாதாரண நாவலுக்கு குறிப்பிட்ட வடிவம் இருக்கும். இதில் வடிவம் தகர்க்கப்பட்டு இருக்கும். நான் எழுதிய, 'அட்லான்டிக் மனிதன்' நாவலில் 12 அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனி முடிவுகள் இருக்கும். அதை வாசகர்கள் சிறுகதையாக கூட வாசிக்கலாம். சேர்த்து வாசித்தால் நாவலாக வடிவம் பெறும். ஐரோப்பிய பின் நவீனத்து முறையோடு, இந்திய மரபையும் கலந்து எழுதுகிறேன்.

தமிழில் உங்களுக்கு முன் வேறு யாரும் பின் நவீனத்துவ நாவல் எழுதவில்லையா?
தமிழில் நான் எழுதிய, 'அலெக்சாண்டரும் ஒரு தேனீர் கோப்பையும்' என்ற நாவல் தான் முதல் பின் நவீனத்துவ நாவல். அதற்கு முன் யாரும் எழுதவில்லை. நான் எழுதிய ஐந்து நாவல்களுமே பின் நவீனத்துவ நாவல்கள்தான்.

தமிழில் இனி பின் நவீனத்துவ இலக்கியம் எழுதப்படுமா ?
இன்றைக்கு தமிழ் படைப்பாளர்களும், வாசகர்களும் பின் நவீனத்துவத்தை புரிந்துள்ளனர். இளம் படைப்பாளர்கள் பலர் அது சார்ந்த படைப்புகளை எழுதுகின்றனர். கல்லுாரிகளில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு பாடத்தில் பின் நவீனத்துவம் சொல்லித்தரப்படுகிறது. மற்ற மொழிகளை காட்டிலும், பின் நவீனத்துவ இலக்கியம் படைக்க ஏற்ற மொழி தமிழ்தான்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X