| பாரதீய சங்கம் ஆர்ப்பாட்டம் Dinamalar
பாரதீய சங்கம் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 மே
2015
00:00

விழுப்புரம்: மின் துறை அதிகாரிகளை கண்டித்து பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம், விழுப்புரத்தில் நடந்தது.

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள மின் பொறியாளர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் முருகன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில பாரத பொது செயலாளர் முரளிகிருஷ்ணன், மாநில செயலாளர்கள் பாலசுப்ரமணியன், தேவராஜ், பழனி கண்டன உரையாற்றினர். மாநில தலைவர் இளகோவன் பேசுகையில், மின் ஊழியர் தெய்வசிகாமணி, காமராஜர் வீதியில் உள்ள மின் கம்பத்தில் பணியின் காரணமாக ஏறினார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தெய்வசிகாமணியை, அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்ய முயற்சிப்பதை கண்டிக்கிறோம். பாதிக்கபட்டவருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றார். நகர செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X