| திருக்கோவிலூர் அருகே 11 ஏக்கர் கரும்பு எரிந்து சேதம் Dinamalar
திருக்கோவிலூர் அருகே 11 ஏக்கர் கரும்பு எரிந்து சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 மே
2015
00:01

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த எடையூர் கிராமத்தில் 11 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு எரிந்து சேதமடைந்தது.

திருக்கோவிலூர் அடுத்த எடையூர் கிராமத்தில்பெருமாள் என்பவரது நிலத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் நேற்று மதியம் 12:00 மணிக்கு, திடீரென தீ பற்றியது. காற்று பலமாக வீசியதால் தீ அடுத்தடுத்த வயல்களுக்கும் பரவியது. அதே ஊரைச் சேர்ந்த ராமன், லட்சுமணன் ஆகியோர் தங்களது கரும்பு தோட்டத்தில் சோலைக்கு வைத்த தீ, பக்கத்தில் இருந்த கரும்பு தோட்டத்திற்கு பரவியதாக தெரிய வந்தது. தகவல் அறிந்த திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அந்தோனிகுருஸ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் மேலும் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த கரும்பு பயிர்கள் தப்பியது. இந்த விபத்தில் 11 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் எரிந்து சேதம் ஏற்பட்டது. விபத்து குறித்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X