| பெண் கொலையில் பாதிரியாருக்கு தொடர்பு? போலீஸ் கமிஷனரிடம் தாய் புகார் Dinamalar
பெண் கொலையில் பாதிரியாருக்கு தொடர்பு? போலீஸ் கமிஷனரிடம் தாய் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2015
04:22

கோவை:கோவை, கோட்டைமேடு, சாமியார் புதுவீதியை சேர்ந்த சகாயராஜூ மனைவி சாந்தி ரோஸ்லின், இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனு:


கோவை மைக்கேல் பேராலயத்தின் உதவி பங்கு தந்தையாக இருந்தவர் ஆரோக்கியராஜ். இவர் எங்களுக்கு குடும்ப ரீதியாக நண்பரானார். எனது மகள் பாத்திமா சோபி, ௧௮, நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வாளையார் பகுதியிலுள்ள புனித தனிஸ்லாஸ் தேவாலயத்தில், எனது மகளை ஆசிரியராக ஆரோக்கியராஜ் நியமித்தார். விடுமுறை நாட்களில், அருகிலுள்ள கன்னியர் மடத்தில் தங்கி விடுவாள். ௨௦௧௩ம் ஆண்டு வலுக்கட்டாயமாக வாளை யார் பேராலயத்துக்கு, எனது மகளை ஆரோக்கியராஜ் அழைத்து சென்றார்.


அன்றைய தினம் எனது மகள், தற்கொலை செய்ததாக பாதிரியார் தெரிவித்தார். ஆனால், எனது மகள் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கிறோம். இதுகுறித்து கேரள முதல்வர், டி.ஜி.பி., ஆகியோரிடம் முறையிட்டோம். எனது மகள் பலியானது தொடர்பாக பாதிரியாருக்கு உள்ள தொடர்பு பற்றி, நான் தெரிவித்த கருத்துக்களால் சிலர், எனது வீட்டை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.


பாதிரியார் ஆரோக்கியராஜை போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் போனை 'அட்டெண்ட்' செய்யவில்லை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X