ஆதிலா, மகன், மகள் கொலை வழக்கில் கல்லூரி மாணவர்கள் உட்பட ஐந்து பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2010
02:16

வாடிப்பட்டி:ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஆதிலாபானு, மகன் முகமது அஸ்லாம், மகள் ஆஜிராபானுவை கடத்தி கொலை செய்த வழக்கில், கல்லூரி மாணவர்கள் இருவர் உட்பட ஐந்து பேரை மதுரை வாடிப்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சுமோ கார் பறிமுதல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு. குப்பன்வலசை சேர்ந்தவர் முத்துசாமி. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின், தனது பெயரை அகமது என முத்துசாமி மாற்றி கொண்டார். ஆதிலாபானுவுடன் குப்பன்வலசையில் வசித்து வந்தார். இவர்களுக்கு முகமது அஸ்லாம் (7) என்ற மகனும், ஆஜிராபானு (5) என்ற மகளும் இருந்தனர்.முத்துசாமி, தனது குடும்பத்துடன் மலேசியா கோலாலம்பூரில் குடியேறினார். ஆண்டு தோறும் தாயாரை பார்க்க, ஆதிலாபானு, தனது குழந்தைகளுடன் ராமநாதபுரம் வருவது வழக்கம். கடந்த ஆகஸ்ட்டில் ஆதிலாபானு, குழந்தைகளுடன் ராமநாதபுரம் வந்தார். அக்.,8ம் தேதி முதல் அவரையும், குழந்தைகளையும் காணவில்லை.


மதுரை வாடிப்பட்டி அருகே வாய்க்காலில் மூவரும் பிணமாக கிடந்தனர். குற்றவாளிகளை கைது செய்ய, வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இவ்வழக்கில், முத்துச்சாமியின் நண்பர் ரேஷன் கடை ஊழியர் ஜெயக்குமார், கடந்த நவ.,17ல் கைதானார். இவரது மைத்துனர் முனியசாமி கைதானார். இவரது தகவல்படி, சாத்தான்குளம் ஷேக் தகஷத் (19). இவர் கீழக்கரை கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு மாணவர். தமிமுல் அன்சாரி (21). இவர் மரைன் டிப்ளமா பட்டதாரி. நாகூர் உசேன் (19), மதுரையை சேர்ந்த ஷாநவாஷ் (20). இவர் மதுரை தனியார் கல்லூரியில் பி.காம்., இறுதியாண்டு மாணவர் ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.ஷேக்தகஷத், தமிமுல் அன்சாரி, நாகூர்உசேன், ஷாநவாஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:திட்டமிட்டபடி, கடந்த நவ., 8ம் தேதி மாலை 6 மணிக்கு ஆதிலா, குழந்தைகளை, ஜெயக்குமார் பைக்கில் ஏற்றி வந்தார். அவரை, சாகுல் தாக்கினார். ஜெயக்குமார் கீழே விழுந்தார். ஆதிலா, குழந்தைகளை ஸ்கார்பியோ (டிஎன்65 கே 2223) காரில் கட்டாயப்படுத்தி ஏற்றினோம். காரில் சாகுல், நண்பர்களான முனியசாமி, முகமது ஹர்ஷத், மணிவண்ணன் மற்றும் நாங்கள் நால்வர் உடனிருந்தோம்.


ஆதிலா, குழந்தைகளை கொலை செய்ய வேதாரண்யம் சென்றோம். செல்லும் வழியில் மாருதி ஆம்னியை வாடகைக்கு பிடித்தோம். அதில், ஆதிலா, குழந்தைகளை ஏற்றினோம். அவர்களுக்கு துணையாக முனியசாமியை ஏற்றினோம். ஆம்னியை பின் தொடர்ந்து சென்றோம். வேதாரண்யத்தில் கொலை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.தாய், மகன், மகள் கொலை:ஆம்னியில் இருந்த ஆதிலா, குழந்தைகளை ஸ்கார்பியோவிற்கு மாற்றினோம். முனியசாமியை, ஆம்னியில் ஏறி ஊருக்கு செல்லும்படி கூறினோம். பின், ஸ்கார்பியோவில் இரவு எட்டு மணிக்கு சாத்தான்குளம் புறப்பட்டோம். வரும் வழியிலேயே ஆதிலா, குழந்தைகளின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி சாகுல், மூவரையும் கொலை செய்தார். சாகுலின் பாட்டி பக்கீரம்மாளுக்கு சொந்தமான சவுக்கு தோப்புக்கு வந்தோம். அங்கு மூவரையும் குழி தோண்டி புதைத்தோம். கொலை சம்பவம் பக்கீரம்மாளுக்கு தெரிந்தது. அவர், பிணத்தை அப்புறப்படுத்தும்படி எச்சரிக்கை விடுத்தார்.உடல்கள் தோண்டியெடுப்பு:கடந்த நவ., 10ல் மீண்டும் சவுக்கு தோப்புக்கு வந்து மூவர் உடலையும் தோண்டி எடுத்தோம். உடல்களை சுமோ காரில் (டிஎன்65 எப் 3999) ஏற்றி,கொடைக்கானல் டம்டம் பாறைக்கு புறப்பட்டோம். உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால், கொடைக்கானல் செல்லும் வழியில் செக்போஸ்ட்டில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது எனக்கருதி, குழந்தைகள் உடல்களை ஒரு மூடையாகவும், ஆதிலா உடலை தனியாகவும் கட்டினோம். வாடிப்பட்டி அருகே கட்டக்குளத்தில் ஆதிலா உடலையும், விராலிபட்டி அருகே குழந்தைகள் உடலையும் வீசி விட்டு சென்றோம்.


இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளனர்.கொலைக்கான காரணம் என்ன:மண்டபம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சீனிகட்டி. இவரது மகன், சாகுல் தங்கையின் கணவர். சீனிகட்டியின் கார் டிரைவராக ஆதிலா கணவர் முத்துசாமி இருந்தார். முன்விரோதம் தொடர்பாக தங்கையின் கணவரை கும்பல் வெட்டி கொலை செய்தது. அரசு தரப்பு சாட்சியாக முத்துசாமி சேர்க்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முத்துசாமி பிறழ்சாட்சியம் அளித்தார். கொலையாளிகள் விடுதலையானார்கள். இதனால், முத்துசாமி மீது சாகுலுக்கு வெறுப்பு ஏற்பட்டது.மலேசியா கோலாலம்பூரில் முத்துசாமியும், சாகுலும் எதிரெதிரே ஓட்டல் நடத்தினர். இவர்களுக்குள் தொழில் போட்டி ஏற்பட்டது. சம்பவத்தன்று முத்துசாமியை, சாகுல் தாக்கியுள்ளார். ராமநாதபுரம் வந்த ஆதிலா, கணவரின் நண்பர் ஜெயக்குமாரிடம் மலேசியாவில் நடந்த தகராறு குறித்து கூறியுள்ளார். மேலும், கணவரை தாக்கிய சாகுலின் கையை, ஆள் வைத்து வெட்டாமல் விடமாட்டேன் என கூறியுள்ளார். இதுகுறித்து தனது நண்பரான சாகுலிடம், ஜெயக்குமார் கூறினார். ஆதிலாவை விட்டு வைத்தால் தனது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என சாகுல் கருதியுள்ளார். இதனால், ஜெயக்குமார் உதவியுடன் ஆதிலா, குழந்தைகளை கடத்தி சாகுல் தனது நண்பர்கள் உதவியுடன் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இரண்டு மணி நேரத்தில் கொலை:


ஆதிலா, குழந்தைகளை கடந்த நவ.,8ம் தேதி மாலை 6 மணிக்கு காரில் கடத்திய சாகுல், வேதாரண்யத்தில் கொலை செய்ய சந்தர்ப்பம் கிடைக்காமல் மீண்டும் சாத்தான்குளம் வந்துள்ளார். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மூவரையும் கொலை செய்து புதைத்துள்ளார். இச் சம்பவம் சாகுல் பாட்டி பக்கீரம்மாளுக்கு தெரியவந்தது. அவர் எச்சரிக்கை செய்ததால் ஆதிலா, குழந்தைகள் உடல்களை மீண்டும் தோண்டி எடுக்க வேண்டிய கட்டாயம் சாகுலுக்கு ஏற்பட்டது. கொலை சம்பவம் பக்கீரம்மாளுக்கு தெரியாமல் போயிருந்தால், ஆதிலா, குழந்தைகள் குறித்து போலீசார் கண்டுபிடிக்க காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம்.மலேசியா போலீஸ் ஒத்துழைப்பு:



போலி பாஸ்போர்ட் மூலம் சாகுலும், ஒரிஜினல் பாஸ்போர்ட் மூலம் முகமது ஹர்ஷத், மணிவண்ணன் ஆகியோரும் மலேசியா தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோலாம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை, மதுரை எஸ்.பி., மனோகர் தொடர்பு கொண்டு, குற்றவாளிகளை கைது செய்ய தேவையான உதவிகளை அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். குற்றவாளிகள் ஓரிரு நாளில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. பிற குற்றவாளிகளை பிடித்த வாடிப்பட்டி தனிப்படை போலீசாரை ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி, டி.ஐ.ஜி., சந்தீப்மித்தல், எஸ்.பி., மனோகர் ஆகியோர் பாராட்டினர்.


 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சில்லு வண்டு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
22-நவ-201012:41:09 IST Report Abuse
சில்லு வண்டு ஓ;இந்த கொலையில் இவ்வளவு பிரச்சனைகள் இருந்திருக்கிறது;இருந்தாலும் இந்த கொலைகார படு பாவிகளை பிடித்து என்கவுண்டர் முறையில் போட்டு தள்ளுங்கள் போலிஸ் சார் அவர்களே;இவனுகளை எல்லாம் சும்மா விடக்க கூடாது;
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X