புரதம் தேவையை அதிகரிக்க பயறு வகை பயிர் சாகுபடி செய்து அதிக வருவாய் பெற அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2015
03:15

மோகனூர்:"பயறு வகைப்பயிர்களை தனிப்பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ, ஆடிப்பட்டத்தில் பயிரிட்டு, நமக்குத் தேவையான புரதத் தேவையை அளிக்கும் இப்பயிர்களின் மூலம் நல்ல வருவாய் பெறலாம்' என, மோகனூர் வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:பயறுவகைப் பயிர்கள், நம் உடலுக்கு தேவையான புரதத்தேவையை அளிப்பதில் முன்னிலை வகிக்கிறது. பயறுவகை பயிர்கள் எல்லாவிதமான மண் மற்றும் தட்பவெப்பநிலைகளையும் தாங்கி வளரும் தன்மை கொண்டவை. பெரும்பாலும் பயிறுவகைப் பயிர்கள் ஊடுபயிராகவே பயிரிடப்படுகிறது.நெல் வயலில் வரப்பு ஓரங்களிலும், கரும்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் தோட்டக்கலைப் பயிரான மரவள்ளி சாகுபடியில் ஊடுபயிராகவும் பயறுவகைப் பயிர்கள் பயிரிடப்படுகிறது. அவ்வாறு ஊடுபயிராக பயிரிடுவதால், விவசாயிகள் குறிப்பிட்ட அந்த நிலத்தில், பயறு வகைப்பயிர்கள் மூலம் கூடுதல் வருவாய் பெறுவதோடு, அந்த வயலில் களைக் கட்டுப்பாடும் சாதகமாகிறது.உளுந்து, பாசிப்பயிறு மற்றும் துவரை போன்ற பயிறு வகைப் பயிர்களின் தேவை மற்றும் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விவசாயிகள் இப்பயிர்களை தனிப்பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ பயிரிட்டு, பண்ணை சாகுபடியில் குறைந்த பரப்பில் அதிக வருவாய் பெறுகின்றனர்.இப்பயிர்களை ஊடுபயிராக பயிரிடும்போது, முக்கியப்பயிர் மற்றும் ஊடுபயிர்களின் சத்துத் தேவைகளை அறிந்து இரண்டுக்கும் தனித்தனியாக உரமிட வேண்டும். தனிப்பயிருக்கு மட்டும் உரமிடுவதால், ஊடுபயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில், பயிர்களுக்கு இடையே போட்டி ஏற்படுகிறது.

எனவே, இரண்டு பயிர்களுக்கும் அனைத்து தேவைகளுக்கும் போட்டி ஏற்படாதவாறு மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட்டு சாகுபடி செய்தால் இரண்டிலுமே நிறைவான மகசூல் பெறமுடியும். பயறு வகைப்பயிர்களை தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ ஆடிப்பட்டத்தில் பயிரிட்டு, நமக்குத் தேவையான புரதத் தேவையை அளிக்கும் இப்பயிர்களின் மூலம் நல்ல வருவாய் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X