சோலைக்காடுகளை புனரமைக்கும் திட்டம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2015
05:51

மதுரை : 'தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை சோலைக் காடுகளை புனரமைக்க நிபுணர் குழு அமைத்து திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.


மதுரை சரவணன் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 22 ஆயிரம் எக்டேர் சோலைக்காடுகள் உள்ளன. இவற்றிற்கு ஆபத்து ஏற்படும் வகையில் சீகை (வாட்டல்), முள்மரங்கள், யூகலிப்டஸ் மரங்கள் நட்டுள்ளனர். இவை, அதிக நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இயற்கையாக வளரும் தாவரங்கள், புதர்களை வளரவிடுவதில்லை. வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றன. சீகை, முள்மரங்கள், யூகலிப்டஸ் மரங்களை அகற்றவும், நிபுணர் குழு அமைத்து சோலைக் காடுகளை பாதுகாக்கவும் வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.


நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி அமர்வு விசாரித்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் கோவிந்தன் ஆஜராயினர்.


கொடைக்கானல் வன அலுவலர் வெங்கடேஷன் ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கை: கொடைக்கானல், நீலகிரியில் சோலைக் காடுகளை பாதுகாக்கும் வகையில் சீகை மரம், யூகலிப்டஸ் மரங்களை அழிக்க நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டது. களைச்செடிகளை அகற்றி சோலைக் காடுகளை புனரமைக்க தேசிய கருத்தரங்கு நடந்தது. 57 ஆயிரத்து 497 மெட்ரிக் டன் சீகை, யூகலிப்டஸ் மரங்களை அகற்றி தொழில்துறை பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். நீலகிரியில் 2019 க்குள் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.--கொடைக்கானலில் 2020 க்குள் 530 எக்டேரில் இந்த மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டது. வனவிலங்கு சரணாலயமாக கொடைக்கானல் அறிவிக்கப்பட்டதால், இத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. 2014--15 ல் கொடைக்கானலில் 385, நீலகிரியில் 300 எக்டேரில் இந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட பகுதிகளில் நன்மைதரும் 60 ஆயிரம் சோலை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.


நீதிபதிகள், 'சோலைக் காடுகளை புனரமைக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி நிபுணர் குழு அமைத்து திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 4 வாரங்கள்

ஒத்திவைக்கப்படுகிறது,' என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X