காசு அள்ளித் தரும் கடம்ப மர சாகுபடி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2010
00:40

தாம்பரம் : மருத்துவ குணம், பென்சில், தீக்குச்சி, காகிதம் தயாரிக்க பயன்படும் வெள்ளை கடம்ப மரத்தை மகசூல் செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டிற்கு பல லட்ச ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்பகுதியில் உள்ள வன விரிவாக்க மையங் களை தொடர்பு கொண்டு, விவசாயிகள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்று கொள்ளலாம்."ஆந்தோசெபாலஸ் கடம்பா' என்ற தாவரவியல் பெயரை கொண்டது கடம்ப மரம். இம்மரத்தின் இலை மற்றும் பட்டைகளில் இருந்து காடமைன், ஐசோகாடமைன், கடம்பைன் போன்ற அல்கலாயிடுகள் தயாரிக்கப்படுகின்றன. இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் குளோரா ஜெனிக் அமிலம் ஈரல் பாதுகாப்பு மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த மரத்தில் இருந்து அதிக இலைகள் கொட்டுவதால் மண்ணில் அங்கக கரிமவளத்தை கூட்ட உதவுகிறது. கடம்ப மரம், பென்சில் மற்றும் தீக்குச்சி தயாரிப்பு, காகிதம் தயாரிப்பு, வீடுகளின் மேல்தள பலகை மற்றும் தேயிலை பெட்டிகள் செய்யவும் பயன்படுகிறது. இப்பூக்களில் இருந்து நீராவி வடித்தலின் மூலம் கிடைக்கும் தைலம், சந்தன எண்ணெய் உடன் சேர்ந்து வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுகிறது.சாதாரணமாக 10 மீட்டர் உயரம் மற்றும் இரண்டு மீட்டர் சுற்றளவுள்ள அடி மரமும் கொண்டதாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் 23 மீட்டர் உயரமுள்ள மரங்களும் உள்ளன. நடுமரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்த நிலையில், தலைப்பகுதியில் பெரிய பந்து போன்ற தழையமைப் புடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மே, ஜூலை மாதங்களில் பூந்தலைகள் தோன்றிடும்.வெள்ளை கடம்ப மரம் கடல் மட்டத்தில் இருந்து 300 - 800 மீட்டர் உயரம், வருட வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ், வருட மழையளவு 1,600 மி.மீ., உள்ள பகுதிகளில் நன்கு வளரும். ஆழமான, ஈரமான, நல்ல வடிகால் உள்ள வண்டல் மண் நிலங்களில் மிக வேகமாக வளரும். மலை அடிவாரங்களில் உள்ள நிலங்களுக்கு ஏற்ற மரமாக கடம்ப மரம் உள்ளது.வளமற்ற மற்றும் மண்ணில் காற்றோட்டம் இல்லாத நிலங்களில் மரம் வளராது. கடற்கரை பகுதிகளில் நடலாம். ஆனால், உப்பு நீர்ப்பகுதிகளில் வளராது. நீர் செழிப்பு மிக்க சதுப்பு நிலங்களில் நன்கு வளரும். எனவே, கிராமங்களில், ஏரிகளின் உட்பகுதியில் உள்ள நிலங்களிலும், ஏரியின் கரையை ஒட்டிய நிலங்களிலும், ஆற்றோர நிலங்களிலும் இம்மரத்தை வளர்க்கலாம்.ஏக்கருக்கு ஒரு லட்சம் லாபம்: இம்மரத்தை பென்சில் தொழிற்சாலைக்கு விற்பனை செய்யும் போது, கன அடிக்கு 250 ரூபாய் என ஒரு மரம் 2,750 ரூபாய் வரை விலை போகும். இதன்படி, 3.25 து3.00 மீட்டர் இடைவெளியில் நடப்பட்ட தோட்டத்தில் ஏக்கருக்கு 400 மரங்கள் இருக்கும். 10 ஆண்டுகளில் 10 லட்ச ரூபாய் கிடைக்கும். இதன்படி, ஆண்டு வருவாயாக ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் பெறலாம்.


 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X