அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்தில் சோதனை: வேறு காப்பகத்துக்கு மாற மறுத்து குழந்தைகள் "அடம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2015
07:05

திருச்சி: திருச்சியில் அனுமதியின்றி செயல்பட்ட, தொண்டு நிறுவன காப்பகத்தில், நேற்று, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர், விசாரணை மேற்கொண்டனர். அதில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிப்பதற்கான ஆவணங்கள் முறையாக இல்லாததால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, காப்பகத்தில் இருந்த குழந்தைகளை வேறு காப்பகத்துக்கு மாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


திருச்சி, சுப்பிரமணியபுரத்தில், "மோஸ் மினிஸ்ட்ரீஸ்' தொண்டு நிறுவனம் சார்பில், இயங்கி வரும் குழந்தைகள் காப்பத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் உஷா ஆய்வு செய்தார். அரசு அனுமதியின்றியும், குழந்தைகளின் விவரங்கள் முழுமையாக பதிவு செய்யப்படாமலும் காப்பகம் செயல்பட்டது தெரிய வந்தது. இதுபற்றி விளக்கமளிக்குமாறு, காப்பகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் அனுப்பி, ஓராண்டாகியும், காப்பகத் தரப்பில் உரிய பதில் அளிக்காததால், சமூக நல அலுவலர் உஷா,திருச்சி, கே.கே.நகர் போலீஸில் புகார் செய்தார். அரசு அனுமதியின்றியும், இளைஞர் நீதிச்சட்டத்தை பின்பற்றாமலும் காப்பகத்தை நடத்தியதாக அதன் நிர்வாகி கிதியோன் ஜேக்கப் மீது, போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனால், முன்ஜாமின் கேட்டு, அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற, மதுரை கிளையில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம், 12.30 மணிக்கு காப்பகத்துக்கு வந்த மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திராகாந்தி மற்றும் அதிகாரிகள், காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய், குழந்தைகளுக்கான கல்வி ஆலோசனை அலுவலர் ஜெசி இன்ஃபெண்டா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திரா காந்தி, காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய் மற்றும் காப்பகத்தின் கல்வி ஆலோசனை அலுவலர் ஆகியோரிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். ஆனால், காப்பகத்தை நிர்வகித்து வந்தவர்கள், கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினர்.


காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய், விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாவது: கடந்த, 1990ம் ஆண்டு உசிலம்பட்டியில், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, குழந்தைகள் மீட்பு மையம் துவக்கினோம். இதில், 1989ம் ஆண்டு முதல், 1997ம் ஆண்டு வரை, சுற்று வட்டார கிராமங்களில், அனாதையாக விடப்பட்ட, 89 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, சேர்க்கப்பட்டனர். அதில், இரண்டு பெண் குழந்தைகள், நோய் பாதித்து இறந்து விட்டனர். குழந்தைகள் மீட்கப்பட்ட நாளை, அவர்களது பிறந்த நாளாக கணக்கிட்டு, பதிவு செய்தோம். இந்த குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் கிடையாது. உசிலம்பட்டி மையத்தில் இருந்த குழந்தைகளை, கடந்த, 1994ம் ஆண்டு திருச்சியில் துவங்கப்பட்ட மோஸ் மினிஸ்ட்ரீஸ் காப்பகத்துக்கு அழைத்து வந்தோம். இவ்வாறு, அவர் கூறினார்.


காப்பகத்தில், மாலை, 3.30 மணிக்கு விசாரணை முடித்த, குழந்தைகள் நலக்குழுவினர், அரசு மருத்துவக்குழுவினரை வரவழைத்து, குழந்தைகளின் உடற்கூறுகளை ஆய்வு செய்து, அவர்களின் வயதை உறுதி செய்தனர். தொடர்ந்து, போலீஸ் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கண்டோன்மென்ட் போலீஸ் உதவி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மேலும், மாவட்ட சமூக நல அலுவலர் உஷா, திருச்சி கிழக்கு தாசில்தார் சிவசங்கரன் மற்றும் வருவாய்த்துறையினர் காப்பகத்துக்கு வந்தனர். அவர்கள் காப்பகத்தில் உள்ள நிலையை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி, வேறு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும், குழந்தைகள் அனைவரும், காப்பகத்தில் இருந்து வெளியேற மறுத்து விட்டு, அங்கேய ஜெபம் செய்யத் துவங்கினர். மாலை, 6.30 மணிவரை பேச்சுவார்த்தை நடத்தியும் குழந்தைகள் வெளியேற மறுத்து விட்டதால், அரசு துறை அதிகாரிகளும், போலீஸாரும் செய்வதறியாமல் காப்பகத்திலேயே முகாமிட்டுள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலெக்டர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X