| அதனூர் நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த அரசுக்கு கோரிக்கை Dinamalar
அதனூர் நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த அரசுக்கு கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 அக்
2015
00:45

விழுப்புரம்: அதனூர் நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த அதனூரில், கிராம மேம்பாட்டு நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் ராஜா வரவேற்றார். செயலாளர் சரவணன், துணை தலைவர் திருமலை, பொருளாளர் லட்சாதிபதி, சீனுவாசன், சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அதனூரில், கடந்த 1960ம் ஆண்டு துவக்கப்பட்ட நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும், பழுதடைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தை சீரமைக்கவும், கிராம துப்புரவு பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு <உறுப்பினர்கள் சுப்புராயன், ஓம்பிரகாஷ், சிவபெருமான், தனஞ்செழியன், சரவணன், வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்
டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X