மெரீனா : மெரீனா கடற்கரையில், கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம், அடையாளம் காணப்பட்டு, நேற்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மெரீனா கடற்கரையில், நேற்று முன்தினம் மாலை கரை ஒதுங்கிய பெண் சடலம் குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அந்த பெண், அபிராம புரம், நாராயணசாமி தோட்டத்தை சேர்ந்த, ஜான்சிராணி, 28, என, தெரியவந்தது. அவர் கடந்த மூன்றாண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம், காலை, 10:15 மணிக்கு, வெளியே செல்வதாக கூறி புறப்பட்டவர், வீடு திரும்பவில்லை என, தெரியவந்தது. ஜான்சிராணியின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.