மதுரை பைபாஸ் ரோடு ஆறு வழிச்சாலையாக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு! பணியை நேர்த்தியாக மேற்கொள்ள முதல்வர் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2015
07:20

மதுரை : 'தினமலர்' நாளிதழ் செய்தியின் எதிரொலியாக மதுரை பைபாஸ் ரோடு ஆறு வழிச்சாலையாகிறது. இதற்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு பெற்று, நெடுஞ்சாலைத்துறை பணியை துவங்கவுள்ளது. பணியை நேர்த்தியாக மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


மதுரையில் 200 அடி அகலம் கொண்ட ஒரே ரோடு பைபாஸ். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொறுப்பில் இருந்தது. இதை பராமரிப்பதாக கூறி மாநகராட்சி நிர்வாகம் 2007 ல் எடுத்தது. ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் செய்து கடைகள் நடத்த தனியார்களுக்கு மாநகராட்சி ஒப்புதல் வழங்கியது. இருபுற சர்வீஸ் ரோடுகளில் காய்கறி மார்க்கெட் நடத்தவும் அனுமதித்தது. ஆக்கிரமிப்பாளர்களால் பைபாஸ் 40 அடி ரோடானது.


'தினமலர்' செய்தி எதிரொலி

பைபாஸ் ரோட்டின் தற்போதைய அவலம் குறித்து 'தினமலர்' நாளிதழ் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதன் எதிரொலியாக, மாநகராட்சி பொறுப்பில் இருந்த பைபாஸ், நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.சென்னை அண்ணாசாலை போல பைபாஸ் ரோட்டை ஆறுவழிச்சாலையாக்க திட்டமிடப்பட்டு சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. வருவாய், நில அளவைத்துறைகள் மூலம் ரோட்டை அளவீடு செய்து குறியீடுகள் செய்யப்பட்டன. ஆறுவழிச்சாலையாக்க தேவைப்படும் நிதி, வரைபடம், திட்ட மதிப்பீடு தயாரித்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.


ரூ.15 கோடி ஒதுக்கீடு

முதல்வர் ஜெயலலிதா இதற்கு ஒப்புதலளித்து, ரூ.15 கோடி ஒதுக்கியுள்ளார். இதன்படி ஆரப்பாளையம் வைகை ஆறு காமராஜர் பாலத்தில் இருந்து பைபாஸ் ரோடு கருப்பணசுவாமி கோயில் வரை 3.08 கி.மீ., துாரம் ஆறுவழிச்சாலையாக மாற்றப்படுகிறது. தலா 5.50 மீட்டர் அகலத்தில் சர்வீஸ் ரோடுகள், தலா 10.50 மீட்டர் அகலத்தில் மூன்று வரிசை கொண்ட பிரதான ரோடு, நடுவில் தடுப்புச்சுவர் உயரத்தை ஆறு அடியாக உயர்த்தவும், நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


முதல்வர் உத்தரவு

சென்னை அண்ணாசாலையையடுத்து, மதுரை பைபாஸ் ரோடு ஆறுவழிச்சாலையாக உள்ளதால், பணியை நேர்த்தியாகவும், சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவும் முடிக்க, நெடுஞ்சாலைத்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-அக்-201515:53:12 IST Report Abuse
Sundar It is appreciable and thanks to Dinamalar. It is also requested to bring the issue of cleaning 'Kiruthamal River and Anupanadi channel'. Also to provide dedicated channel for the drainage water polluting Vaigai River and to cut 'Karuvel Trees' along the river bed.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X