போலி ஆலை விவகாரம்: மது கடத்திய வாகனங்களுக்கு போலி ஆவணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2015
07:12

ஈரோடு: ஈரோட்டில் போலி மதுபான ஆலை விவகாரத்தில் பிடிபட்ட இரு வாகனங்களில், ஒரு வாகனத்துக்கு போலி ஆவணமும், மற்றொன்றுக்கு ஆவணமே இல்லாததும் தெரிய வந்துள்ளது.


ஈரோடு அருகே சித்தோட்டில், போலி மதுபான ஆலை செயல்படுவதை போலீசார், கடந்த, 18ம் தேதி கண்டுபிடித்தனர். இது தொடர்பாக புதுச்சேரி சதீஷ், கோவை போத்தனூர் வாசுதேவன், சென்னிமலை தன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலை செயல்பட வீடு கொடுத்த பழனிச்சாமி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இவ்விவகாரத்தில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தன்பாறா, மாங்காதொட்டியை அடுத்த புறவன்காடுவீட்டை சேர்ந்த ஷாஜி, 40 கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள கிருஷ்ணகிரியை சேர்ந்த வெள்ளைசாமி (எ) ராமதாசுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். எனினும் ஷாஜியிடம் இருந்து எதுவும் கைப்பற்றவில்லை. மது விவகாரத்தில் கைதாகி ராமதாசும், ஷாஜியும் ஏற்கனவே சிறையில் நண்பர்களாகினர். நட்புக்காக தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார். ஷாஜி கொடுத்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ராமதாஸ் மட்டுமின்றி ராதாகிருஷ்ணன், கி?ஷார் ஆகிய மூன்று முக்கிய நபர்களும், வெளிநாடு அல்லது பிற மாநிலங்களுக்கு தப்பி சென்று இருக்ககூடும் அல்லது பிற மாநில அரசியல் கட்சியினர் அடைக்கலம் கொடுத்து இருக்க கூடும் என்று சந்தேகிக்கிறோம். கிஷோர் பயன்படுத்திய கருப்பு நிற, மாருதி ஸ்விப்ட் கார் எண் கிடைத்துள்ளது. சுங்கச்சாவடி கேமராக்களில் பதிவான வாகன எண்களை சரிபார்த்து வருகிறோம். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சுவராஜ் மஸ்தா வேன் மகேந்திரா பொலிரோ ஜீப் ஆகிய வாகனங்களின் ஆவணங்களை சோதனை செய்தோம். இதில், ஸ்வராஜ் மஸ்தா வண்டி, சென்னையில் பதிவு செய்ததாக ஆவணங்கள் இருந்தன. அதை சரி பார்த்த போது போலி என்பது தெரிந்தது. இதனால், வாகன உரிமையாளர்கள் பெயரை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு வாகனத்துக்கு ஆவணமே இல்லை. இதனால், விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், ஆர்.டி.ஓ., அலுவலகம் மூலம் வாகன உரிமையாளர்களின் பெயரை பட்டியலிட்டு விசாரிக்க முடிவு செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட ஷாஜி கொடுத்துள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு, தனிப்படை விசாரணை செல்கிறது. இவ்விவகாரம் முழுமையாக முடிவுக்கு வந்த பின்னரே, துறை ரீதியான விசாரணை துவங்கும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X