மண்வளத்தை நிலை நிறுத்தும் உளுந்து : மானாவாரி ஆராய்ச்சி நிலையம்
Added : டிச 29, 2015 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

காரைக்குடி: "அறுவடை மேற்கொள்ளும் விவசாயிகள் அடுத்ததாக நிலத்தை தரிசாக போடாமல், மண்வளத்தை நிலை நிறுத்தும் விதமாக உளுந்து பயிரிடவேண்டும்,' என வேளாண் ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கிறது. ஒரு எக்டேர் சத்தான மண்ணில் ஒரு சதவீதம் கரிம சத்தும்,300 கிலோ தழைச்சத்தும் 20 கிலோ மணிச்சத்தும், 200 கிலோ சாம்பல் சத்தும் இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கரிமச்சத்து 0.4 சதவீதம் முதல் 0.7 சதவீதம் வரையே உள்ளன. நெல் நடவு செய்தவர்கள் மண் வளத்தை அதிகப்படுத்தும் உளுந்து பயிரை பயிரிட்டனர். உளுந்தானது வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை உட்கிரகித்து மண்ணின் தழைச்சத்தை அதிகரிக்கவல்லது. உதிரும் இலைகள் கரிமசத்தை அதிகரிக்கும். அதன் வேரில் உள்ள முடிச்சுகளில் தழைச்சத்தை கிரகித்து கொடுக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. இதனால், மண்வளம் மேம்பட்டு வந்தது. மழையின்மையால் அறுவடை முடிந்ததும் நிலத்தை தரிசாக போட்டு வந்தனர். இதனால் மண்வளம் குன்றி, போதிய விளைச்சல் பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இந்த ஆண்டு போதிய மழை பெய்துள்ளதால், பெரும்பாலான பகுதி கண்மாய்களில் நீர் இருப்பு உள்ளன. கடந்த ஆண்டில் விவசாயம் மேற்கொள்ளாதவர்களும் பருவம் தவறி விதைத்துள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் அறுவடை தொடங்க உள்ளது. அறுவடை முடிந்ததும் நிலத்தின் வளம் மேம்பட உளுந்து பயிரிடலாம் என செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி நிலைய துறை தலைவர் மெர்டில் கிரேஸ் கூறுகையில், ""மழை ஓரளவு பெய்துள்ளதால் நெல் அறுவடை முடித்த விவசாயிகள் வம்பன் 5,6 கோ-6 உள்ளிட்ட உளுந்து வகைகளை தை பட்டத்தில் விதைக்கலாம். 65 முதல் 75 நாளில் விளைச்சல் கிடைக்கும். ஏக்கருக்கு 5 கிலோ விதை மட்டும் தேவைப்படும். 5 கிலோ விதையில் 50 கிராம் சூடோமோனஸ், 10 கிராம் டிரைக்கோ டெர்மாவிரிடி கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். உளுந்துக்கான சந்தை மதிப்பு அதிகரித்துள்ளதால், விவசாயிகள் லாபம் பெறலாம்,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X