தென்னை மரங்கள் ஏற பெண்களுக்கு பயிற்சி:வழி காட்டும் விவசாய கல்லூரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 ஜன
2016
06:41
பதிவு செய்த நாள்
ஜன 18,2016 04:39

மதுரை;மதுரை விவசாய கல்லுாரி வேளாண் அறிவியல் மையத்தில் பெண்களுக்கு தென்னை மரங்கள் ஏறுவதற்கும், பிற இயந்திரங்களை கையாள்வதற்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.'எர்கனோமிக்ஸ்' முறையில் கிராம பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்காக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நிலக்கடலையை செடி மற்றும் காய்களை தனியாக பிரிப்பது, மக்காச்சோள விதை பிரிப்பதற்கு ஒரு நாள் இயந்திர பயிற்சி அளிக்கப்படுகிறது.


இதுகுறித்து மையத்தின் உழவியல் துறை உதவி பேராசிரியர் பத்மநாபன் கூறியது: பெண்கள் கையாளும் வகையிலான கருவிகளுக்கு குழுவாகவும், தனியாகவும் பயிற்சி தருகிறோம். பாதுகாப்பான முறையில் தென்னை மரங்கள் ஏறுவதற்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் கிராமப் பெண்கள் அச்சமின்றி தென்னை மரம் ஏறலாம்.

விவசாயிகளுக்கு நேரடி நெல் விதைப்பு மற்றும் களை கருவி மற்றும் ஸ்பிரேயர் கையாளும் முறை ஒரு நாள் பயிற்சியாக தரப்படுகிறது. விவசாயிகள், படித்த இளைஞர்கள் குழுவாக வரலாம். மானாவாரியில் நிலக்கடலை, பருத்தி, மக்காச்சோளம் பயிர்களை விதைப்பதற்கும், களை எடுப்பதற்கும் சற்றே பெரிய கருவிகள் தேவைப்படும். இவற்றை இயக்குவதற்கு பயிற்சி தரப்படுகிறது. பயிற்சிக்கு பின் விவசாயப் பொறியியல் துறை மூலம் மானியத்தின் மூலம் கருவிகள் வாங்கவும் ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகள் இதன் மூலம் பயன்பெறலாம், என்றார். விபரங்களுக்கு: 97888 20438.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X