செயின்ட் ஜோசப் கல்லூரியில் நாளை "இண்டெப்' கலை விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2010
01:50

திருச்சி: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில், துறைகளுக்கிடையேயான "இண்டெப்' கலைவிழா நாளை 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது.திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் (பொ) பாதிரியார் செபாஸ்டின் ஆனந்த் கூறியதாவது: கடந்த 1988ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் ஜோசப் கல்லூரியில், துறைகளுக்கிடையேயான "இண்டெப்' கலைவிழா நடக்கிறது. இந்தாண்டு நாளை  முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. கிராமிய இசை, நடனம், செவ்விசை, மேற்கத்திய இசை மற்றும் நடனம், குறு நாடகம், பேச்சுத்திறமை, ஓவியம், குறும்படம், புகைப்படம் எடுத்தல், பல்சுவை நிகழ்ச்சிகளில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.வெறும் பட்டம் மட்டுமே பெற்றால் உரிய வேலைவாய்ப்பு கிடைக்காது. கலை, பண்பாட்டை வளர்ப்பதின் மூலமே மாணவர்களிடம் முழு ஆளுமை திறனை வளர்க்க முடியும். இது முழுக்க முழுக்க மாணவர்களால், மாணவர்களுக்கு நடத்தப்படும் நிகழ்ச்சி. நிகழ்ச்சி ஏற்பா டு, ஒருங்கிணைப்பு, தொகுப்பு என அனைத்து பணிகளையும் மாணவர்களே செய்கின்றனர்.மாணவர்களின் வளர்ச்சி வெறும் புத்தகத்தில் இல்லை. பன்முக திறமையை அவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். 13ம் தேதி கல்லூரி வளாகத்தில் கலைப்பேரணி அணிவகுப்பு நடக்கிறது. சிறந்த அணிவகுப்பு துறைக்கு பரிசளிக்கப்படும்.பல்கலை நிதி நல்கை குழு, கடந்தாண்டு ஒரு கோடி ரூபாய் நிதிஒதுக்கியது. தற்போது, 11வது ஐந்தாண்டு திட்டத்தின்கீழ் 75 லட்ச ரூபாய் கல்லூரிக்கு நிதி ஒதுக்கியுள்ளது. அந்நிதியை கொ ண்டு, கல்லூரி மாணவிகளுக்கான தனி விடுதி கட்டும் பணி நடந்து வருகிறது. வரும் மே மாதத்துக்குள் கட்டிடப்பணிகள் முடிக்கப்பட்டுவிடும். பல்வேறு கல்வி முகாம், வளாக தேர்வு கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்களை வழிநடத்தும் விதமாக, முதல்முறையாக மாணவர் நலன் கல்வி புல முதல்வர் பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் டீனாக அலெக்ஸ் ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.துணைமுதல்வர் மணிவளன், பேராசிரியர்கள் சுவக்கீன், மகிமை அருள் இக்னேஷியஸ், செல்வராஜ், மாணவர் பேரவைத்தலைவர் சிலம்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X