| குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் Dinamalar
குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஏப்
2016
00:05

கோவை: சிவில் இன்ஜினியரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ரத்தினபுரி, தயிர் இட்டேரி ரயில்வே கேட் அருகில் சின்னராஜ் நகரை சேரந்த சோலைராஜன் மகன் தாமரைச்செல்வன், 27. சிவில் இன்ஜினியர். சாய்பாபா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது சகோதரர் பிரசாந்த், 25. மெக்கானிக்.

நேற்று முன்தினம் மாலை பிரசாந்த் மற்றும் பி.எம்.சி., காலனியை சேர்ந்தவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை தாமரைச்செல்வன் தட்டிக்கேட்டார். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த கும்பல் இரவு உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி, பீர் பாட்டில் உள்ளிட்டவற்றுடன் தாமரைசெல்வனின் வீட்டுக்கு சென்று, அவரை சரமாரியாக தாக்கி பீர் பாட்டிலால் குத்தினர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தாமரைசெல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரத்தினபுரி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை நடந்தது. இதற்காக அங்கு கூடிய அவரது உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாலை மறியல் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். பிரேதப்பரிசோதனைக்கு பின், உறவினர்கள் சடலத்தை பெற்றுச் சென்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X