| சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா Dinamalar
சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஏப்
2016
00:06

கோவை: கோயம்புத்துார் சோஷியல் கிளப் சார்பில், சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா தடாகம் ரோட்டில் உள்ள கிளப் வளாகத்தில் நடந்தது.

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசுகையில், ''இதுபோன்ற மன்றங்கள் பொழுதுபோக்குக்காகவும், விளையாட்டை ஊக்குவிப்பதற்காகவும் மட்டும் செயல்படாமல், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், சமுதாயப்பணி ஆற்ற வேண்டும். இந்தியாவில், இதுபோன்ற மன்றங்களுக்கு பற்றாக்குறை உள்ளது,'' என்றார்.

சானிடரி நாப்கின் தயாரிப்பு கருவியை குறைந்த செலவில் உருவாக்கியதற்காக விருது பெற்ற கிளப் உறுப்பினர் முருகானந்தம், இந்தியாவின் தலைசிறந்த, 100 தலைமை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவரான கே.பி.ஆர்., கல்வி நிறுவன தலைவர் ராமசாமி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கிளப்பின் உதவி தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். தலைவர் சுப்ரமணியம், சிண்டிகேட் வங்கி மண்டல மேலாளர் மோகன்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X