| ஆற்றல் சேமிப்பது எப்படி? பல்கலையில் விழிப்புணர்வு Dinamalar
ஆற்றல் சேமிப்பது எப்படி? பல்கலையில் விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஏப்
2016
00:07

கோவை: பெட்ரோல், இயற்கை எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றின் தற்போதைய நிலை மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடந்தது.

பெட்ரோலிய சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பயிற்றுநர் வைத்தீஸ்வரன் கூறியதாவது:

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், அதிகபட்சமாக இந்தியா, 30-35 சதவீத பெட்ரோலியம் இறக்குமதி செய்கிறது. இதை முறையாக செலவிட வேண்டியது நம் கடமை. வாகனங்களில் ரேடியல் டயர் உபயோகம் மூலம், 3 -7 சதவீத பெட்ரோல் சேமிக்கலாம். மேலும், வீடுகளில் ஐ.எஸ்.ஐ., முத்திரை உடைய அடுப்புகளையே உபயோகப்படுத்த வேண்டும். குளிர்சாதன பெட்டியில் வைத்த பொருட்களை அறை வெப்ப நிலைக்கு வந்த பின்னரே சூடு செய்ய வேண்டும்.

மைக்ரோவேவ் அடுப்பு மற்ற அடுப்புகளை விட, 50 சதவீத ஆற்றல் சேமிப்பு அளிக்கிறது. அறையில், குளிர்சாதன வசதி இருந்தால், 25 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைக்க வேண்டும். எல்.இ.டி., மற்றும் டயோடு விளக்குகளை பயன்படுத்தி ஆற்றல் சேமிக்கலாம். முடிந்தவரை இயற்கை சக்திகளை பயன்படுத்துவதே சிறந்தது.

இவ்வாறு, வைத்தீஸ்வரன் கூறினார்.

தொடர்ந்து, மாணவர்களுக்கு ஆற்றல் சேமிப்பு குறித்த புத்தகம், கையேடு வழங்கப்பட்டது. வேளாண் பல்கலையின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் லதா மற்றும் அத்துறையினர், இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X