| சிட்டி கிரைம் Dinamalar
சிட்டி கிரைம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஏப்
2016
00:08

கல்லுாரி மாணவி மாயம்

செல்வபுரத்தை சேர்ந்த ௧௯ வயது மாணவி, கோவைபுதுாரிலுள்ள தனியார் கலை, அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு பி.காம்., படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. செல்வபுரம் போலீசில் தந்தை புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.


பூ வியாபாரியை தாக்கிய பெண் கைது

சாய்பாபாகாலனி, கே.கே.,புதுாரை சேர்ந்தவர் ஜோதி லட்சுமி, ௪௫. என்.எஸ்.ஆர்.,ரோடு சந்திப்பு, அழகண்ணன் வீதியில், பூ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரிடம் திருப்பூர், ஊத்துக்குளியை சேர்ந்த மஞ்சுளா என்பவர் பூ விலை கேட்டார். அப்போது, பூ விலை அதிகமாக இருப்பதாக சொல்லி வாக்குவாதம் செய்த பெண், பூ வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். சாய்பாபாகாலனி போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, மஞ்சுளாவை கைது செய்தனர்.


மது விற்றவர் கைது

சிங்காநல்லுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட கமலா மில் குட்டை ரோட்டிலுள்ள, 'டாஸ்மாக்' கடையில் நேற்று முன்தினம் போலீசார் சோதனையிட்டனர். அப்போது, சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்த நடராஜன், ௩௯ என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி சென்ற 'பார்' உரிமையாளர் செந்தில் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


வாலிபர் மரணம்: போலீசார் விசாரணை

ஒடிசா, சித்ராஞ்சலி பகுதியை சேர்ந்தவர் நரேஷ் மாகாகுரு, ௨௨. இவர் கோவை, கொடிசியா அருகே உள்ள ஜவுளி நிறுவனத்தில், வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை திடீரென சுயநினைவிழந்து கீழே விழுந்த வாலிபரை அருகே இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே வாலிபர் உயிரிழந்தார். பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


லாட்டரி விற்றவர்கள் கைது

செல்வபுரம் போலீசார் நேற்று முன்தினம் சிவாலயா சந்திப்பில் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இப்ராகிம், ௪௫, ஜான் பாட்ஷா, ௨௯ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும், ௨,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X