மின் வழி... தனி வழி! உருவாகிறது மின்கம்பம் இல்லாத கோவை: புதைவடம் பணிகள் 90 சதவீதம் 'ஓவர்'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

07 செப்
2016
10:32
பதிவு செய்த நாள்
செப் 06,2016 23:38

கோவை: 'அந்த காலத்துலயெல்லாம் கரென்ட் லைனை கொண்டு போக, ரோடு முழுவதும் வரிசையா மின்சார கம்பம் இருந்ததாமே...உண்மையா மம்மி?' - பாடப்புத்தகத்தில் மட்டுமே இடம் பெற போகும், இன்றைய மின்கம்பங்கள் குறித்து, வருங்கால தலைமுறையினர் இப்படி கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆம்...மின்கம்பமில்லா நகராக, விரைவில் மாறப் போகிறது கோவை!


கோவை மாநகர எல்லைக்குட்பட்ட, நுாறு வார்டுகளை தேர்வு செய்து, அங்கு கண்ணாடி இழைகளை கொண்டு, புதை வடம் அமைக்கும் பணியை, தமிழ்நாடு மின்பகிர்மானக்கழகம், சில மாதங்களுக்கு முன் துவக்கியது. பணி விறுவிறுப்பாக நடந்ததால், இதுவரை 102.35 கி.மீ., துாரத்துக்கு, உயர் மின்னழுத்த கேபிள் பதிக்கப்பட்டுள்ளது.


தாழ்வழுத்த கேபிள்களை, 135 கி.மீ., துாரத்துக்கு பதித்துள்ளது. இப்பணிகள் முழுமையடையும் போது, கோவை மாநகர எல்லைப்பகுதியில் உள்ள, 6 லட்சம் வீட்டு மின் இணைப்புகள், 86 ஆயிரத்து, 425 வர்த்தக மின் இணைப்புகள், 19 ஆயிரம் தொழிற்சாலை மின் இணைப்புகள் என சுமார், பத்து லட்சம் இணைப்புகள், பூமிக்கடியில் பிரத்யேக வழித்தடம் வாயிலாக இயங்கும். இதன் வாயிலாக மின்கம்பங்கள் இல்லாத நகரமாக கோவை நகர் மாறவுள்ளது.


இத்திட்டம், சென்னைக்கு அடுத்தபடியாக, வளர்ந்த நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், கோவையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இது குறித்து தமிழ்நாடு மின்பகிர்மானக்கழகம், கோவை மெட்ரோ மேற்பார்வை பொறியாளர் பாரதி கூறியதாவது:

வெளிநாடுகளில் இத்திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தப்பட்டுள்ளது. மின்கம்பங்கள், மின்கம்பிகளால் மின் இழப்பு ஏற்படுகிறது. மின் பணியாளர்களுக்கு பணிச்சுமை, மின்திருட்டு ஏற்படுகிறது. இதை தடுக்கும் முயற்சியாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், 2 அடி ஆழத்துக்கு குழி வெட்டி மின்சார கேபிள்களை பதிக்கிறோம்.


இதனால் தொலைதொடர்பு, குடிநீர் வடிகால் வாரியம், மொபைல் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதனால் இத்தொழில்நுட்பத்தை தமிழகம் முழுவதும் படிப்படியாக செயல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக நுாறு வார்டுகளில் பணிகள் முடிந்தவுடன், மாவட்டம் முழுவதும் பணிகளை மேற்கொள்ள திட்டம் வகுத்துள்ளோம். குளம், குட்டை, உள்ளிட்ட நீர் நிலைகளில், அதற்கேற்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, கேபிள் பதிக்கப்படுகிறது.


இத்திட்டம் கோவை நகரில், 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. முழுமையாக நிறைவடைந்த பின், நகரில் உள்ள, 8, 9,11 மீட்டர் அளவுள்ள, 15 ஆயிரம் மின்கம்பங்கள் அப்புறப்படுத்தப்படும். திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு, பாரதி கூறினார்.


கணக்கிட முடியாத மின்சார இழப்பு

மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உயர் மின் அழுத்த மின்கம்பிகளில் மின்சாரத்தை, ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்துக்கு கொண்டு செல்லும் போது, மின்அழுத்தம், மின்கம்பி அளவீடு, மின்சாரம் பயணிக்கும் துாரம் ஆகியவற்றின் அடிப்படையில், மின் இழப்பு கணக்கிடப்படும். இந்த மின் இழப்பு, காற்று, ஈரப்பதம், வெப்பம் உள்ளிட்ட காலச்சூழலை அடிப்படையாக கொண்டு மாறுபடும். எவ்வளவு என கூற முடியாது' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar guru - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-செப்-201615:58:37 IST Report Abuse
kumar guru பூமிக்கு அடியில் ஒரு பொதுவான கான்க்ரீட் பாதையை கட்டமைத்து அதில் மின்சார, தொலைத்தொடர்பு மற்றும் அனைத்து விதமான கேபிள்களுக்கும் பயன்படுத்தலாம். அடிக்கடி தோண்ட வேண்டியதில்லை. வேண்டிய இடத்தில் திறந்து கொண்டாலே போதும்.
Rate this:
Share this comment
Cancel
s viswanathan - Hyderabad,இந்தியா
07-செப்-201612:40:47 IST Report Abuse
s viswanathan அருமையான அறிவியல் முன்னேற்றத்தை அப்படியே நடைமுறைப்படுத்தி தேசத்தை முன்னேற்றுவோம்
Rate this:
Share this comment
Cancel
parthiban - coimbatore,இந்தியா
07-செப்-201610:01:47 IST Report Abuse
parthiban அது எல்லாம் சரிதான் ,, மழை காலத்தில் மழை நீர் தேங்கினால் மின்சாரம் லீக் ஆகி சாக் அடிக்காதா ??? அப்படி தண்ணீரை சரி செய்ய முதலில் மின்சார வாரியத்திடம் கூற வேண்டுமா ?? அல்லது குடி நீர் வடிகால் நிறுவனத்திடம் கேட்க வேண்டுமா ?? அல்லது கார்ப்பரேஷன் இல் அந்தந்த மண்டலங்களில் கேட்க வேண்டுமா ?? அல்லது கவுன்சிலரிடம் கூற வேண்டுமா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X