| ஆந்திராவை பிரிக்க மார்க்சிஸ்ட் எதிர்ப்பு Dinamalar
ஆந்திராவை பிரிக்க மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஜன
2011
00:37

புதுடில்லி : "ஆந்திராவை இரண்டாக பிரிப்பதால், மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. தெலுங்கானா விவகாரம் குறித்து, மா.கம்யூ., மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது: ஆந்திராவை இரண்டாக பிரிப்பதால் மட்டும், மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தி விட முடியும் என, கருதக் கூடாது. பிராந்திய ஏற்றத் தாழ்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளை, மற்ற தீவிர நடவடிக்கைகளால் சரி செய்ய வேண்டுமே தவிர, மாநிலத்தை பிரிக்கக் கூடாது.

தெலுங்கானா பிரச்னை குறித்து, எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். இனி, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கும் நடவடிக்கையை தொடர்ந்து நீட்டிக்கக் கூடாது. இவ்வாறு யெச்சூரி கூறினார்.

ஆந்திராவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் முக்கிய தலைவர்களில் ஒருவரான பி.வி.ராகவலு கூறுகையில், "ஆந்திராவை பொறுத்தவரை, தற்போதுள்ள நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும். "இப்பிரச்னைக்கு அரசு, விரைவில் தீர்வு காண வேண்டும். தொடர்ந்து ஆலோசனை நடத்துவதால், எந்த பயனும் ஏற்படாது. "அடுத்த கூட்டத்தில், இப்பிரச்னைக்கு உறுதியான தீர்வை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என்றார்.


 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X