தேனி:தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்தியாவில் முதன் முறையாக ஐ.எஸ்.ஓ.,-9001 விருது வழங்கப்பட்டுள்ளது.தலை சிறந்த நிர்வாகம், சிறப்பாக செயல்படும் வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகளுக்கு ஐ.எஸ்.ஓ., 9001 என்ற தரச் சான்று விருது வழங்கப்படுகிறது. இவ்விருது இந்தியாவிலேயே முதன் முறையாக, ஒரு மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விருதை வழங்குவதற்காக, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள, ஐ.எஸ்.ஓ., நிறுவன முதன்மை அலுவலர் முகமது சாது இன்று தேனி வருகிறார். தேனியில் நடக்கும் விழாவில், கலெக்டர் முத்துவீரனிடம் சிறந்த மேலாண்மை ஐ.எஸ்.ஓ., 9001-2008 தரச் சான்றிதழை வழங்குகிறார்.மேலும், சுற்றுச் சூழல் மேலாண்மைக்காக, ஐ.எஸ்.ஓ., 14,001-2004 விருது, சுகாதார மற்றும் பாதுகாப்பு மேலாண்மை ஐ.எஸ்.ஓ., 18,001-2007 ஆகிய விருதுகளையும் வழங்க உள்ளார்.