கூவம் கரையை ஆக்கிரமித்து, கழிவுகளை கொட்டி அட்டகாசம்:ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வருமா கிடுக்கிப்பிடி?
Updated : அக் 04, 2016 | Added : அக் 04, 2016 | கருத்துகள் (4) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சிந்தாதிரிப்பேட்டையில், கூவம் கரையை ஆக்கிரமித்து, கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களை நடத்தும் சிலர், மீன் கழிவுகளை கூவத்தில் பகிரங்கமாக கொட்டி, அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால், அரசின் கூவம் மறுசீரமைப்பு திட்டம், வீணாகி விடும் அபாயம் எழுந்துள்ளது.சென்னையின் அவமான சின்னமாக மாறிவிட்டது, கூவம் நதி; ஆட்சியாளர்கள், மாறி மாறி நதியை சீரமைக்க திட்டம் போட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஏப்பம் விட்டது தான் மிச்சம்; கூவத்தின் அவலநிலை அப்படியே தொடர்கிறது.திட்டத்தின் நோக்கம்ஐந்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், மீண்டும் கூவம் நதி மறு சீரமைப்பு திட்டம் தயாரிக்கப்பட்டது.


இத்திட்டம் கடந்தாண்டில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி எல்லையில் மட்டும், கூவத்தின் கரைகளை நில அளவை செய்வது, கரையை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிறைவேற்றுவதே திட்டத்தின் நோக்கம்!இதற்காக, 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு பகுதியாக, கூவத்தில் கழிவுகள் சேராமல் தடுப்பது, அகற்றுவது, பூங்கா அமைப்பது ஆகிய பணிகளுக்கு ஒப்பந்தம் விட்டு, பணி ஆணையையும் மாநகராட்சி வழங்கி விட்டது.கடல் உணவு ஏற்றுமதிக்கு தலைமையிடமாக, சிந்தாதிரிப்பேட்டை உள்ளது. இங்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு நாடுகள் போன்ற, 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
1 கி.மீ.,க்கு நாசம்:இந்நிறுவனங்கள், அதிக ருசி கொண்ட தமிழக கடல் மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்கின்றன. இத்தொழிலில், 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.கூவம் கரை சாலையை ஒட்டியுள்ள இடம் முழுவதும், கூவம் ஆற்றுக்கு சொந்தமானது என, பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், சாலையில் இருந்து கூவத்தை பார்க்க முடியாத வகையில், சிந்தாதிரிப்பேட்டையில் முழுமையாக, ஏற்றுமதி நிறுவனங்களால் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. சரக்கு லாரிகளில், நிறுவனங்களுக்கு டன் கணக்கில் கொண்டு வரப்படும் மீன்கள், இறால் மற்றும் நண்டுகள், வெட்டப்பட்டு, ஐஸ்பெட்டிகளில் வைத்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உள்ளூரில் சில்லரை விற்பனையும் நடக்கிறது.கடல் உணவு, ஏற்றுமதி தொழில் என்பதால், மீன் கழிவுகளை கூவத்தில் கொட்டி விடுகின்றனர். இத்தொழில் செய்வோர், ஆக்கிரமிப்பாளர்களிடம் பேசி, கூவம் கரையை வாடகைக்கு எடுக்கின்றனர். ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படும் தெர்மோகோல் பெட்டிகள், பயன்பாடு முடிந்ததும், கூவத்திலேயே வீசப்படுகின்றன. கூவத்தில் ஒரு கி.மீ.,க்கு மிகவும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

பல கோடி ரூபாய் மீண்டும் ஏப்பம்?இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:கூவத்திற்கு கேடு ஏற்படுத்துவதன் மூலம், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. கூவத்தில் கழிவுகளை முதலில் அகற்ற வேண்டும். பின், கழிவுகளை யாரும் கொட்டாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அதன் பின், மற்ற மேம்பாட்டு பணிகளை செய்ய வேண்டும். இது தான் சீரமைப்பு திட்டத்தின் சரியான பாதையாக இருக்கும்.
டெண்டர் விட்டு காசு பார்க்கும் நோக்கில், பூங்கா அமைப்பது, இருக்கும் கழிவுகளை அகற்றுவது என, வெட்டி வேலையை அதிகாரிகள் பார்க்கின்றனர்.முறையாக திட்டமிடாமல் செய்யப்படுவதால், தற்போதைய கூவம் சீரமைப்பு திட்டமும், பழைய திட்டங்களை போன்று, பல கோடி ரூபாய்களை விழுங்கிவிட்டு, ஒன்றும் இல்லாமல் தான் போகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
sardar papparayudu - nasik,இந்தியா
05-அக்-201619:43:42 IST Report Abuse
sardar papparayudu அரக்கோணம் போகும் வழியில் தக்கோலம் அருகில் சிறு ஏரியில் தன் பயணத்தை தொடங்கும் இந்த சிற்றாறு அற்புதமானது. இது தன பொலிவினை இழப்பது ஆவடி அருகே உள்ள பருத்தி பட்டில். அதற்க்கு பின் சர்வ நாசம் . சென்னை மாநகரிலிருந்து பாதி தொழிற் சாலைகளை தென் பகுதி திண்டுக்கல் அனுப்பினால்தான் செங்கல்பட்டு , திருவள்ளூர் , காஞ்சிபுரம் பகுதிகள் இழந்த அழகினை மீண்டும் பெறும். இனிமேல் சென்னைக்கு எந்த வித புது திட்டங்களும் வேண்டாம். அதனால் சுற்றுப்புற சூழல் கெடுவதுதான் மிச்சம் .
Rate this:
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
05-அக்-201615:51:16 IST Report Abuse
Rajendra Bupathi யரும் தடுக்க முடியாது? எல்லாம் டாலருல தான் % கொடுக்குறாங்க அப்புறம்,விழுப்புறம்தான்>
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
05-அக்-201610:53:18 IST Report Abuse
நக்கீரன் அரசிற்கு மக்களை பற்றியும் அவர்களுடைய உழைப்பை பற்றியும் என்ன கவலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X