மதுரை, ''கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள். வேறு எந்த பழத்திலும் இல்லாத அளவுக்கு கொய்யாவில் வைட்டமின் 'சி' இருப்பதால், அது குழந்தைகள் வளர்ச்சிக்கு உகந்தது,'' என மதுரை மனையியல் கல்லுாரி உணவியல் மற்றும் சக்தியியல் துறை பேராசிரியர் ஹேமலதா கூறினார்.
கொய்யாவை 'வெப்ப மண்டல ஆப்பிள்' என அழைக்கின்றனர். இந்தியாவில் பழப் பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தியில் கொய்யா நான்காம் இடத்தில் உள்ளது. கொய்யா மரத்தில் கிடைக்கும் இலை, பட்டை உட்பட அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. வியாபார ரீதியில் கொய்யா முக்கிய பயிராக உள்ளது.
பேராசிரியர் ஹேமலதா கூறியதாவது: ௧௦௦ கிராம் கொய்யா பழத்தில், நீர்ச்சத்து ௮௧.௭ கிராம், புரதச்சத்து ௦.௯ கிராம், கொழுப்புச்சத்து ௦.௩ கிராம், தாது
உப்புக்கள் ௦.௭ கிராம், நார்ச்சத்து ௫.௨ கிராம், மாவுச்சத்து ௧௧.௨ கிராம் மற்றும் சுண்ணாம்பு சத்து, கந்தக சத்து, இரும்புச்சத்து போன்றவை உள்ளன. ௫௧ கலோரிகள் கிடைக்கிறது.
வைட்டமின் 'சி'
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் 'சி'யை விட நான்கு மடங்கு அதிகமாக கொய்யாவில் உள்ளது. பற்கள், ஈறுகள், குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல், எலும்புகள் போன்றவற்றை பலப்
படுத்துகிறது.
வேறு எந்த
பழத்திலும் இல்லாத அளவுக்கு கொய்யாவில் வைட்டமின் 'சி' என்ற உயிர்ச்சத்து இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு உகந்தது.
கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்தான 'பெக்டின்' உள்ளன. எனவே, தோலை நீக்கி சாப்பிடக்கூடாது.
சருமத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. இரவு
உணவுக்கு பின் கொய்யா சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது.
நாட்டு கொய்யா
பழங்களில்தான்
சத்துக்கள் அதிகம். ஆனால், விவசாயிகள் அதிக சாகுபடிக்காகவும், லாபத்திற்காகவும்
உயர்ரக கொய்யா உற்பத்திக்கு மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், என்றார்.