சென்னையில் பசுமை வளத்தை மீட்க... முயற்சி! 2.25 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2016
22:56

'வர்தா' புயல் காரணமாக, சென்னை மற்றும்

புறநகர் பகுதிகளில், இழந்த பசுமை வளத்தை மீட்பதற்காக, 2.25 லட்சம் மரக்கன்றுகளை

நடுவதற்கு, அரசு

முடிவெடுத்துள்ளது. அவற்றை, ஆறு மாத காலத்திற்குள் நட

திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த, 12ம் தேதி, 'வர்தா' புயல், 145 கி.மீ., வேகத்தில், சென்னையைத் தாக்கியது. இதனால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. சென்னையில், 4ல், 1 பங்கு, பசுமை வளம் அழிந்தது.

பேரிழப்பு

ஏற்கனவே, நாட்டில் உள்ள பெருநகரங்களில், பசுமை வளத்தில், பின்தங்கியிருக்கும் சென்னைக்கு, இது பேரிழப்பாகும். சில தினங்கள் முன் வரை, பல சாலை ஓரங்களில், மரங்கள் அணி வகுக்க, குளுமை தந்த, 100க்கும்

மேற்பட்ட சென்னை சாலைகள், மரங்களை இழந்த பின், இன்று, வெயில் சுட்டெரிக்கும் பொட்டல்காடாக காட்சி அளிக்கின்றன.

மரங்களை இழந்ததால், சென்னையின் வெப்பநிலை உயரும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, சென்னையின்

பசுமையை, மீண்டும் தழைக்கச் செய்யும் முயற்சிகளை,

வனத்துறை துவங்கியுள்ளது.

அதற்காக, மரங்கள்

விழுந்த பகுதிகளில், புதிய மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவெடுத்துள்ளது.

தமிழக வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மற்றும் புறநகரில், ஒரே நேரத்தில், சிறிதும், பெரிது

மாக, ஒரு லட்சம் மரங்களை நாம் இழந்திருக்கிறோம். இது, சாதாரண விஷயம் அல்ல;

சுற்றுச்சூழலையும், வெப்பநிலையையும், இது பாதிக்கும்.

அதனால், விழுந்த

மரங்களைப் போல், பல மடங்கிலான, மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. புயலுக்குப் பின், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதில், அரசு முழு கவனம் செலுத்தியது.

தற்போது, பசுமையை மீட்டு கொண்டு வர திட்டமிட்டு

உள்ளோம்.

6 மாதங்களில்

பசுமைப் போர்வையை மீட்டெடுக்க, சென்னை

மாநகரில் மட்டும், 1.5 லட்சம் மரக்கன்றுகளை நட

இருக்கிறோம். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை

உள்ளடக்கிய புறநகர்ப்

பகுதிகளில், 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு

முடிவெடுத்துள்ளோம். இந்த, 2.25 லட்சம் கன்றுகளை, ஆறு மாதங்களில் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

மா, வேம்பு, புன்னை போன்ற, உள்ளூர் வகை மரக்கன்றுகள் மட்டுமே நடப்படும். இதற்கான பரிந்துரையை, தமிழக அரசுக்கு அனுப்பிவிட்டோம். விரைவில், அதற்கான நிதி

ஒதுக்கீடு கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள்

தெரிவித்தனர்.


மரங்களை இலவசமாக

தருகிறார் நடிகர் லாரன்ஸ்

சென்னை, மீண்டும் பசுமை பெற, மரக்கன்றுகளை

இலவசமாக தருவதாக, நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

'வர்தா' புயலால், பசுமையை இழந்த சென்னையை, மீண்டும் பசுமையாக்க, அரசும், சமூக ஆர்வலர்களும்

முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில்,

மரக்கன்றுகளை இலவசமாக தருவதாக, நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

அவர் நடத்தி வரும், ராகவேந்திர டிரஸ்ட் மூலம்,

மரக்கன்றுகளை இலவசமாக தருகிறார். வரும், 22ம் தேதி முதல், மரக்கன்று தேவைப்படுவோர் தொடர்பு கொண்டால், அவர்கள் இடத்திற்கே, மரக்கன்று கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மரக்கன்று தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டி மொபைல் எண்: 97907 50784 / 97915 00866.


மீண்டும் மரம் நடுவது சிரமம்

சென்னையில் விழுந்துள்ள பல்லாயிரக்கணக்கான மரங்களில்,

பெரும்பாலானவற்றின் வேர்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அவற்றை, மீண்டும் வளர்ப்பது சிரமம். மிகுந்த முயற்சியும், பொருட்செலவும் செய்தால், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலான மரங்கள் துளிர்க்கக்கூடும். மரங்களின்

கிளைகளை வெட்டி எடுத்து நடுவதும் பெரிய பயன் தராது.

வனத்துறையினர்

- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Emperor SR - Ooty,இந்தியா
23-டிச-201619:15:54 IST Report Abuse
Emperor SR அரசின் முயற்சியும் ராகவேந்திரா லாரன்சின் முயற்சியும் மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று.. புயல் இயற்கை சீற்றம் போன்ற நிகழ்வுகளை நாம் தடுக்க இயலாது அனால் இந்தமாதிரி அழிந்த பசுமை போர்வையையை மீட்டு எதிர்காலத்திற்கு உதவுவது தன்னலமற்ற தொண்டு... அறக்கட்டளை என்றால் நன்கொடை பணத்தை பதுக்குவதற்கு என்றில்லாமல் லாரன்ஸ் அவர்களின் தொண்டு போற்றப்படத்தகுந்தது.. வாழ்க அவரது சேவை
Rate this:
Cancel
Vasu Murari - Chennai,இந்தியா
23-டிச-201602:48:19 IST Report Abuse
Vasu Murari அரசின் இத்தகைய முயற்சிக்கு முதற்கண் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் வாசகர்கள் சார்பில் தெரிவிப்போம். அதற்கு உறுதுணையாக செயல்படவுள்ள ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் சேரட்டும். இந்த மரம் நடும் நிகழ்வு வெறும் சம்பிரதாயத்திற்காக மட்டும் செய்யப்படுகிறதோ என்ற ஐயப்பாடு எனக்கு எப்போதுமே உண்டு/தோன்றுகிறது. காரணம், இந்த மரங்களின் தேவைகள், அவைகளை உண்டாக்குதல் (உற்பத்தி செய்தல்) மற்றும் பராமரித்தல், பாதுகாத்தல் போன்ற இதர விபரங்களைப் பலர் மற்றும் பல குழுக்களாக தனித்தனியாக செய்து வருவதை ஊடகங்கள் வாயிலாக காண முடிகிறது. உதாரணத்திற்கு, சில நாட்களுக்கு முன்பு அண்ணா நகர் SBOA பள்ளி வளாகத்தில் எக்ஸ்னோரா நிறுவனர் திரு.எம்.பி.நிர்மல் ஐயா அவர்களின் முயற்சியால் ஒரு விழா நடைபெற்றது. பின்னர் 'விதைப் பொறுக்கி' மற்றும் 'seed சுந்தர்' என்று தன்னை தானே விமர்சித்துக்கொள்ளும்/சொல்லிக்கொள்ளும் பெசன்ட் நகர்வாசி திரு. சுந்தர்ராமன் ஐயா அவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தோன்றியதை (இரவு 8 மணி செய்தி நேரத்தில்) நான் காண நேரிட்டது. மீண்டும், கடந்த ஞாயிறு (18-12-2016) அன்று மாலை பெசன்ட் நகர் 25ஆவது குறுக்குத் தெருவில் நடைபெற்ற விழா ஒன்றில் முனைவர் சந்திரசேகர் என்பவரின் முயற்சியில் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென் மண்டலம்) தலைவர் முனைவர் திரு. ஜோதிமணி ஐயா அவர்கள் கலந்து கொண்டதொறு நிகழ்ச்சியில் இந்த மரங்கள் நடுதல் பற்றியும் பசுமை போற்றுதல் பற்றியும் ஒரு நிகழ்வு நடை பெற்றது. 'நிழல்கள்' அமைப்பின் ஷோபா அம்மையார் மற்றும் முல்லைவனம் போன்றவர்களையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இது தவிர, பெசன்ட் நகர் பகுதியில் மூர்த்தி என்ற ஒருவரின் தனிமனித முயற்சியால் சுமார் ஐம்பது மரங்கள், அவைகள் வளர்வதற்கு தினமும் தண்ணீர் பெறுகின்றன. இது போன்றே, பலர் மற்றும் பல்வேறு குழுக்கள் தனித்தனியாக செயல்பட்டு வருவதையும் காணும்போது இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு பெரிய குழுவாக செயல்பட்டு ஆலோசித்தால் இந்த மரம் வளர்க்கும் திட்டம் மேலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதே அடியேனது கருத்து.
Rate this:
Cancel
bala - chennai,இந்தியா
21-டிச-201610:04:39 IST Report Abuse
bala இப்பொழுதாவது நம் நாட்டு மரங்களை நட்டு எதிர்காலத்தில் வறட்சிக்கும் புயலுக்கும் தாக்குப்புடிக்கும்படி செய்யவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X