செம்மரக்கட்டைகளை கடத்த வரைபடத்துடன் சுற்றும் கும்பலை பிடிக்க ஆந்திர போலீஸ் தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2017
00:31


வேலுார்: செம்மரக்கட்டைகளை கடத்திச் செல்ல, வரைபடத்துடன் சுற்றித் திரியும் கும்பலை பிடிக்க, ஆந்திர மாநில செம்மரக் கட்டை தடுப்பு பிரிவு போலீசார், வேலுாரில் முகாமிட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே ஸ்ரீசைலம் வனப்பகுதியில், விலை உயர்ந்த லட்சக்கணக்கான செம்மரங்கள் உள்ளன. சர்வதேச அளவில் செயல்படும் கடத்தல்காரர்கள், இந்த செம்மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். இதற்கு மரம் வெட்ட, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தற்போது ஆந்திராவில் வெட்டப்படும் செம்மரக் கட்டைகள், வேலுார் மாவட்டம், காட்பாடி வழியாக பெங்களூருக்கும், பொன்னை வழியாக சென்னைக்கும் கடத்திச் செல்லப்படுகிறது. பின், அங்கிருந்து கொல்கத்தாவுக்கு கடத்துகின்றனர். இதில் வழியில் ஏதாவது பிரச்னை இருந்தால், பதுக்கி வைக்க பொன்னை, ராணிப்பேட்டை, காட்பாடி, வேலுார், ஆம்பூரில் ரகசிய குடோன்கள் உள்ளன.

தமிழக தொழிலாளர்கள் மரம் வெட்டினாலும், அதை கடத்துவது தனி கும்பல் தான். இதில், 80 சதவீதம் தமிழர்களும், 20 சதவீதம் ஆந்திராவைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுகின்றனர். இவர்கள், வேலுார், காட்பாடியில் பதுங்கி உள்ளதால், இவர்களை பிடிக்க, ஆந்திர மாநில செம்மரக் கட்டை தடுப்பு பிரிவு போலீசார், அடிக்கடி வேலுார் வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக, ஆந்திர மாநில செம்மரக் கட்டை தடுப்பு பிரிவு போலீசார், வேலுாரில் தங்கி கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

கடந்த, ஆறு மாதத்தில், ஸ்ரீசைலம், கடப்பா வனப்பகுதியில் இருந்து, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் வெட்டி, வேலுார் மாவட்டம் வழியாக கடத்தப்பட்டுள்ளது. தற்போது மேலும், 250 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் வேலுார் வழியாக கடத்திச் செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதற்காக, கடத்தல்காரர்கள், ஆந்திராவில் இருந்து எந்த வழியாக செம்மரக் கட்டைகள் கடத்தலாம் என்ற விபரங்களை வரைபடமாக வரைந்து, அதை செயல்படுத்துவதற்காக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த கும்பலைச் சேர்ந்த, 16 பேர், வேலுார், ராணிப்பேட்டை, ஆம்பூரில் தங்கி உள்ளனர். அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.

அந்த கும்பலை பிடித்து விட்டால், செம்மரக் கட்டை கடத்தலை தடுத்து, மரம் பதுக்கி வைத்துள்ள இடத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்து விடலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் வேலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X