தீபா ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,வில் இருந்து விலக முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
08:54

வேலூர்: தீபாவுக்கு வாழ்த்து சொல்லி, தங்கள் படத்துடன் பிளஸ்க் பேனர் வைத்த, 80 பேர், அ.தி.மு.க.,வில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.


ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு, வேலூர் மாவட்டத்தில் ஆதரவு அதிகரித்து வருகிறது. ஜெயலலிதா தீபா பேரவை துவங்கப்பட்டு, தீவிர உறுப்பினர் சேர்க்கையும் நடந்து வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், மின்னூர் கிளை கழக அ.தி.மு.க., சார்பில், 80 பேர், தங்கள் படத்தை போட்டு, தீபாவுக்கு, புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து தெரிவித்து, மாதனூரில் பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனரை நேற்று வைத்தனர். இதையடுத்து, நேற்று காலை தீபாவை சந்திக்க, 80 பேரும் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது: தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளோம். அவர் அரசியலுக்கு வராத பட்சத்தில், நாங்கள், 80 பேரும், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க., அல்லது பா.ஜ., கட்சியில் சேர முடிவு செய்துள்ளோம். தீபாவின் ஆதரவாளர்கள் அனைவரும், இதே நிலைப்பாட்டில் தான் உள்ளனர். இதை தீபா உணர்ந்து கொண்டு, நேரடியாக அரசியலில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் வேலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X