| பொய் வழக்கு பதிவு; பஸ் டிரைவர் புகார் Dinamalar
பொய் வழக்கு பதிவு; பஸ் டிரைவர் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 மார்
2017
02:33

திருப்பூர் ;ஊத்துக்குளி அருகே நடந்த விபத்தில், தன் மீது உண்மைக்கு புறம்பாக, போலீசார் வழக்குபதிவு செய்துள்ளதாக, எஸ்.பி.,யிடம், அரசு பஸ் டிரைவர் முறையிட்டார்.


திருப்பூர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக உள்ளவர் தங்கவேல். செங்கப்பள்ளி -திருப்பூர் இடையே டவுன் பஸ்சில் பணியாற்றுகிறார். இவர், தனது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் சிலருடன், திருப்பூர் எஸ்.பி., உமாவை நேற்று சந்தித்து, மனு ஒன்றை அளித்தார்.


அதில் கூறியுள்ளதாவது:கடந்த 28ம் தேதி இரவு, 10:00 மணிக்கு ஊத்துக்குளி அடுத்த பூசாரிபாளையம் அருகே, பைக்கில் வந்த ஒருவர், ரோட்டோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதி உயிரிழந்தார். அப்போது, நான் ஓட்டி வந்த பஸ் மோதி, அவர் இறந்து விட்டதாக, ஊத்துக்குளி போலீசார், சம்பவம் நடந்து ஒருநாளுக்கு பிறகு வழக்கு பதிவு செய்தனர். நான் பஸ்சை ஓட்டி வந்த போது, இந்த விபத்தை பார்த்தேன். ஆனால், என் மீது உண்மைக்கு புறம்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்று கொண்ட எஸ்.பி., உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X